உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

தோற்ற வளர்ச்சி மாற்றங்களையும், வெந்திரையரசு எழுத்தொலி முறை களையும் சொல்லின் வடிவு பொருள் வளர்ச்சிகளையும் மொழிகளையும் வரிவடிவுத் தோற்றத்தையும், புளூம்பீல்டு உலகமொழிகளையும் ஒலிவகை களையும் சொற்றொடர் முறைகளையும் சொன்மாற்றங்களையும் சொற் கடன் கோடல் வகைகளையும் பாடுமேர் மேலைக் குறுங்கணக்கு (Alphabet) வரலாற்றையும் சொற்றொடர் நெறிமுறைகளையும் மொழிகளின் பாகுபாட்டையும் செயற்கையுலக மொழிகளையும் மேலையாரியச் சொற் றொகுதிகளையும் சொன்மூலங்களையும், மேரியோ பெ-மொழியின் வரலாறு அமைப்பு பயன்பாடு முதலியவற்றையும், கிளீசன் வண்ணனை மொழிநூலையும், இலாகோவாரி இந்தியாவிற்கும் நண்ணிலக் கடற்கரைக் கும் இடைப்பட்ட மொழிகளின் படிமுறைத் திரிபையும், பார்பெர் மொழி வரலாற்றையும், எழுத்துவரலாற்றையும் மொழிக்குடும்பங்களையும் ஆங்கில மொழிவரலாற்றையும் சிறப்பாக விளக்கிக் கூறியுள்ளனர்.

இந் நூற்றாண்டிலெழுந்த திரவிட மொழிகளின் இலக்கணங்களும் அகர முதலிகளும் ஆவன:

1903 -கிற்றெலின் கன்னட இலக்கணம்.

1909 -தெனிசு தீ எசு, பிரே எழுதிய பிராகுவீ மொழியின் அறிமுகமும், இலக்கணமும், முதற்பாகம்.

1911 -குல்சே எழுதிய குவீமொழி யிலக்கணம்.

1913 -பிராண்மேயர் (Frohnmeyer) எழுதிய மலையாள இலக்கணம்.

1924 -கிரிகுனாடு எழுதிய ஒராவொன் மொழி அகரமுதலியும் இலக்கணமும்.

1928- பின்பீல்டு எழுதிய கூ-மொழி யிலக்கணம்.

1924 -36 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி 7 மடலம். 1944 -பரோவும் பட்டாச்சாரியாவும் சேர்ந்தெழுதிய 'பர்சிமொழி’ 1955-எமனோ எழுதிய 'கோலாமி ஒரு திரவிடமொழி'

1956- பட்டாரிச்சாரியா எழுதிய ‘கொண்டாமொழி' (இலக்கணமும் சொற் றொகுதியும்).

1957 - பட்டாச்சாரியா எழுதிய‘ஒல்லாரி ஒரு திராவிடமொழி.'