உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

அவற்றையடுத்துத் தெற்கிற் பேசப்படும் சிமிசியமும் (Tsim shian) கிழக்கிற் பேசப்படும் குத்தெனையும் (Kutenai) ஆகும்.

(10) இரித்துவான் (Ritwan) உள்ளிட்ட 25 குடும்பங்கள்

இவை ஒரிகன், கலிபோர்னியா ஆகிய நாடுகளின் பெரும்பகுதியிற் பேசப்படுகின்றன; அமெரிக்க மொழிக்குடும்பங்களுள் ஏறத்தாழ

வட

மூன்றிலொரு பகுதியாயுள்ளன.

இவற்றுள் இரித்துவான் ஒழிந்த ஏனையவெல்லாம், பெனுட்டியும் (Penutian), ஓக்கம் (Hokan) என்னும் இரு கூட்டுக் குடும்பங்களாக அமைகின்றன.

(11) மாயக் குடும்பம் (Mayan)

இது மெகசிக்கோ நிலவிணைப்பினின்று ஒண்டூராசு (Honduras) வரை முற்றடக்கமாகப் பேசப்படும் மொழித்தொகுதியாகும். இதுவே இடை யமெரிக்காவில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பெற்றதும் மிக முதன்மை யானதுமாகும்.

(12) ஆத்தொமாங்குவேயக் (Otomanguean) கூட்டுத்தொகுதி

இது மாயக்குடும்பத்திற்கு மேற்கிலும் வடக்கிலும் வழங்கும் பன்மொழித் தொகுதிக் கூட்டாகும்.

(13) உத்தோ -அசுத்தெக்கக் (Uto -Aztecan) குடும்பம்

இது பெருநிலத் தாழியிலும் (Great Basin) கொலரேடோப் பள்ளத் தாக்கிலும் பேசப்படுவதாகும்.

(14) அத்தபாசுக்கக் குடும்பம் (Athabaskan)

இதன் பேருடற்பகுதி கானடாவின் வடமேற்கிலும் அலாசுக்காவிலும் உள்ளது. இதைச் சேர்ந்த மொழிகள் உத்தோ -அசுத்தெக்கக் குடும்பத் தின் தலைமையிடத்தை ஊடறுத்துத் தெற்கே மெகசிக்கோவரையிலும் பரவி வந்துள்ளன.

(15) தனோவம் (Tanoan), கெரெசம் (Keresan) சுனி (Zuni) என்னும் முக்குடும்பங்கள்

இவை மெகசிகோவிலுள்ள புவேபிளா (Pueplo) மக்களாற் பேசப்படு வன. இவற்றைச் சேர்ந்த பல மொழிகள் ஓரூர் ஒரு மொழிகளாக வேயுள்ளன.