உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

வை அசுத்தெக்கக் குடும்பத்திற்கு இனமானவை.

89

வட அமெரிக்க மொழிகளுட் சில இன்னுங் கற்கப்பெறவில்லை; சில அரைகுறையாகக் கற்கப்பெற்றுள்ளன; முற்றுங் கற்கப்பெற்றவைபற்றியும் கருத்துவேறுபாடுள. ஆதலால், வடஅமெரிக்க மொழிக் குடும்பப் பாகு பாடு சிறிதும் பெரிதும் மாற்றமடையலாம்.

இங்ஙனம் மேலை மொழியாரா-ச்சியாளர் ஒப்பியலைத் துணைக் கொண்டு உலக மொழிகளைப் பல்வேறு குடும்பங்களாகப் பாகுபடுத்தி னரேயன்றி, அவற்றின் முன்மை பின்மைகளையும் உலக முதன்மொழி யையும் அது தோன்றிய வகைகையும் இன்னும் அறிந்திலர்.

இனமற்ற மொழிகள்

சுமேரியாவில் வழங்கிய சுமேரிய மொழியும், இத்தாலியாவில் வழங் கிய எத்திரசுக்க (Etruscan) மொழியும், பிரனீசு மலைநாட்டில் வழங்கும் பாசுக்க (Basque) மொழியும், கொரியாவில் வழங்கும் கொரிய மொழியும், சப்பானில் வழங்கும் சப்பானிய மொழியும் வேறு சிலவும் இனமற்றன வாகச் சொல்லப்படும் மொழிகளாகும்.

உலக மொழிகள் மொத்தம் 2796 எனக் கணக்கிடப் பெற்றுள்ளன. ஏறத்தாழ மூவாயிரம் எனக் கொள்ளினும் குற்றமாகாது.

10. மொழித்தோற்றக் கொள்கைகள்

அறிவியற்பட்ட மொழியாரா-ச்சி தோன்றுமுன், மொழியின் அல்லது மொழிகளின் தோற்றத்தைப்பற்றி அறிஞரிடைப் பல்வேறு தவறான கருத்துகள் இருந்துவந்தன. அவையாவன:

(1) தெ-வக் கொள்கை (Divine Theory)

இது இறைவனே மொழிகளைப் படைத்தான் என்பது. இதுவே முதன் முதல் எல்லா நாடுகளிலும் கொள்ளப்பெற்றுப் பின்பு தள்ளப்பட்டது.

இதை மறுக்கும் ஏதுக்கள்:

1. மொழியில்லாமலும் சில விலங்காண்டி மக்கள் உள்ளனர்.

2. சில மொழிகள் சிறியனவாகவும் அநாகரிகமாகவும் உள்ளன.

3. எவரும் கற்காமல் இயல்பாகத் தம் தா-மொழியைப் பேச இயலாது.