உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

4.மக்கள் முயற்சியால் சிறுமொழிகளும் பெருமொழிகளாக வளர்ந் துள்ளன.

5. திரிபினாலும் கலப்பினாலும் பல புதுமொழிகள் தோன்றியுள்ளன. 6.மக்களெல்லாரும் என்றும் ஒரே மொழியைப் பேசுமாறு இறைவன் செ- திருக்கலாம்.

7. இறைவன் படைத்திருந்தால் மொழிகள் இன்றிருப்பதினும் மிகச் சிறப் பாகவும் குற்றங்குறையற்றும் இருந்திருக்கும்.

(2) ஒப்பந்தக் கொள்கை (Contract Theory)

இது மக்கள் கூடி இன்ன ஒலி இன்ன பொருளுணர்த்துக என்று ஒப்பந் தஞ் செ-துகொண்டது மொழி என்பது. இது உரூசோ கொள்கை

இது

வெண்ணெ

தடவிக் கொக்குப் பிடிக்குங்

தன்மறுப்புக் கொள்கையாதலால் ஆ-விற்குரியதன்றாம்.

(3) தூண்டுணர்ச்சிக் கொள்கை (Instinct Theory)

கதைபோல்

இது, இயற்கையாக மாந்தனிடையெழுந்த தூண்டுணர்ச்சி யொலி களால் மொழிதோன்றிற் றென்பது. இது காண்டிலக்கு கொள்கை.

இதுவும் இறைவன் படைப்புக் கொள்கைபோல் ஏரணமுறைக்கு ஒவ்வாததே.

(4) குறிப்பொலிக் கொள்கை (Pooh- pooh Theory)

இது மாந்தனின் இன்ப துன்பக் குறிப்பொலிகளால் மொழி தோன்றிற் றென்பது.

குறிப்பொலிகள், ஒருசில கருத்துகளையேயன்றி எல்லாக் கருத்துகளை யும் உணர்த்தும் சொற்றொகுதியைத் தோற்றுவிக்கும் ஆற்றலற்றவையாகும்.

(5) ஒப்பொலிக் கொள்கை (Bow - wow Theory)

இது விலங்கு பறவைகளாலும் பல்வேறு நிகழ்ச்சிகளாலும் எழும் ஒலிகளைப் பின்பற்றிய சொற்களைக் கொண்டு மொழி தோன்றிற் றென்பது.

ஒப்பொலிக களும் எல்லாக் கருத்துகளையும் உணர்த்தும் சொற்களைப் பிறப்பிக்கும் ஆற்றலற்றவையே.