உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

முகவுரை

வெள்ளைக்காரர்

சொல்வதெல்லாம் விழுமிய

அறிவியல் என்னும் குருட்டுத்தனமான கருத்து, இந்தியாவில் இன்னும் கற்றாரிடத்தும் இருந்து வருகின்றது. வெள்ளை என்னும் சொல், வெண்ணிறக் கருத்தடிப்படையில், தூய்மையை மட்டுமன்றி வெறுமையையுங் குறிக்கும்.

நீராவியையும் மின்னாற்றலையும் அடிப்படையாகக் கொண்டமைந்த இக்காலப் பொறிவினை சூழ்ச்சியவினை அறிவியல்களெல்லாம், மேலையர் கண்டனவே. ஆயின், மொழிநூலோ உலகின் முதன்முதல் இலக்கணம் இயற்றப் பெற்ற தமிழில் தோன்றியமையால், தமிழர் கண்டதாகும். அது இக்காலத்திற்போல் விரிவடையாததேனும், மொழிகள் பல்காத முந்திய காலத்தில் தோன்றியமையால், அக்கால முறைமைப்படி முழுநிறைவானதே.

எல்லாக் கலைகட்கும் அறிவியல்கட்கும் வரலாறு அடிமணையும் முதுகந்தண்டுமாதலால், வரலாற்றை நீக்கி வரையப்பட்ட எந்நூலும், எவர் இயற்றியதேனும் அறிவியன் முறைப் பட்டதாகாது.

வணிகத்துறையிற்போன்றே மொழித்துறையிலும், ஒரு மொழி விளம்பரத்தினால் உயர்வதும் இன்னொரு மொழி அஃதின்மையால் தாழ்வதும் நேர்கின்றன. தம் பொருளை விளம்பரஞ் செய்வார் பிறர்பொருள் விளம்பரத்தைப் பல தீயவழிகளால் தடுப்பதும், எல்லாத் துறையிலும் வழக்கமா யிருந்து வருகின்றது.

விளம்பரத்தாலும் வேறுவகையாலும் பிறரை ஏமாற்று வதையே ஒருவர் மேற்கொள்ளினும், எல்லாரையும் எக்காலத்தும்