உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

xi

ஏமாற்றமுடியாது. ஒருசாராரை ஒரு வரைப்பட்டகாலத்திற்குத் தான் ஏமாற்றமுடியும்; ஒரு சாராரை எக்காலத்தும் ஏமாற்றலாம்; ஒரு சாராரையோ ஒருகாலத்தும் ஏமாற்ற முடியாது.

ஒரு பொருளின் உண்மையை ஒப்புக்கொள்ளுதற்கு நடுநிலைமையும் வேண்டும். அல்லாக்கால், ஏதேனுமொரு தொடர்புடையவர் பொருள் பிறர் பொருளினுந் தாழ்ந்த தாயிருப்பினும், உளச்சான்றிற்கு மாறாக அதை உயர்ந்ததென்றே கொள்ள நேரும்.

ஆயினும், பொதுவாக, இறுதியில் “மெய்வெல்லும்; பொய் தோற்கும்”என்றே நம்பப்படுதலால், ஆரிய விளம்பரத்தின் விளைவாக மறைந்து கிடக்கும் தமிழைப்பற்றிய உண்மைகளை அறிதற்குத் தடையாகவுள்ள வண்ணனை மொழிநூலின் வழுவியலை, மொழிநூல் கல்லாரும் கண்டறிந்து கொள்ளுமாறு, இச் சிறுநூலை எழுதத் துணிந்தேன்.

சமற்கிருதத்தைப் பரப்புவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பூனாத் தெக்காணக் கல்லூரியின் சார்பாக, ஆண்டுதோறும் நடத்தப்பெறும் வேனிற்பள்ளியில் அறுகிழமையும்

லையுதிர்காலப் பள்ளியில் முக்கிழமையும் பயிற்சிபெற்ற அளவிலேயே வண்ணனை மொழிநூலறிஞராகக் கிளம்பும் ஆங்கில பட்டந்தாங்கியரான மாணவர், தமிழிலக்கியப் பரப்பையும், பொருளிலக்கணச் சிறப்பையும் குமரிநாட்டுத் தமிழ்ப்பிறப்பையும் எங்ஙனம் அறியவல்லார்? என்பதை அறிஞர் கண்டுகொள்க.

இந் நூலின் கட்டடமும், உய்ப்பும்பற்றித் திருநெல்வேலித் தென்னிந்திய சை.சி.நூ.ப.க. ஆட்சித் தலைவர் திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகள் பாராட்டத்தக்கன.

"L

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.”