உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

அவற்றினின்று அலகுடைக்கும் நெடுஞ்சொற்கள் தோன்றினவென்றும், அவை வை உயர்ந்த இசையிலும் அலகிலும் ஒலித்தனவென்றும், அவற்றி னின்றே பிற்காலச் சொற்கள் தோன்றினவென்றும் கூறுவது.

இது செசுப்பெர்சென் கொள்கை.

வா-க்கு வந்தபடி உணறும் இசையொலிகளினின்று, ஒழுங்கான பெயர் வினையிடைச் சொற்களும் அவற்றின் பல்வேறு வடிவுகளும் தோன்றினவென்பது, முட்செடிகளினின்று முக்கனிகளும் தோன்றின என்பதையே ஒக்கும்.

இனி, உணர்வொலிக் கொள்கை (Emotion Theory) என்பதும் ஒன்றுண்டு.

இங்ஙனம் 18ஆம் நூற்றாண்டுமுதல் 20ஆம் நூற்றாண்டுவரை மேலை மொழிநூலார் மொழித் தோற்றத்தை ஆ-ந்துவந்ததும், இன்னும் உண்மைகாண இயலாதவராயிருக்கின்றனர். இதற்கு முந்தியல் இயன் மொழியாகிய தமிழை அடிப்படையாகக் கொள்ளாது பிந்தியல் திரிமொழி யாகிய சமற்கிருதத்தை அல்லது ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டதே கரணியம்.

முழைத்தல்மொழி, (Inarticulate Speech), இழைத்தல்மொழி (Ar ticulate Speech) என மொழி இருவகைப்படும் என்பதையும்; இவற்றுள் முன்னது உணர்ச்சியொலிகள், விளியொலிகள் முதலிய எழுவகையொலி களாலும், பின்னது சுட்டொலி வளர்ச்சியாலும், ஆயினவென்பதையும், என் தமிழ் வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.