உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வண்ணனை மொழிநூல்

1. மொழிநூற் குலைவு

மொழிநூலானது வரலாற்றியல், வண்ணனையியல், ஒப்புநோக்கியல் என்னும் மூவியல்களையும் ஒருங்கேயுடையதேனும், மேலை மொழி யன்மொழியாகிய தமிழை அடிப்படையாயக் கொள்ளாது திரி

நூலார் பில்

திரிபாகிய ஆரியத்தை அடிப்படையாக வைத்து ஆ-ந்ததினால், மூல மொழியையும் அது தோன்றிய வகையையுங் காணாது குன்று முட்டிய குரீ போல் இடர்ப்பட்டு, வரலாற்றியலை அடியோடு விலக்கிவிட்டு வண் ணனையியலையும் ஒப்பியலையுமே கையாண்டுவருகின்றனர்.

ஒரு குடும்பத்திலுள்ள மக்களுள் ஒவ்வொருவரையும்பற்றி, இவர் இன்ன பாலினர்; இன்ன நிறத்தர்; இன்ன வளர்த்தியர்; இன்ன தோற்றத்தர்; இன்ன இயல்பினர்; இன்ன திறமையர் என்று கூறுவது போன்றது வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics)

ஒரு குடும்பத்தார் எல்லாரையும் ஒப்புநோக்கி, இக் குடும்பத்தில் இத் தனையர் ஆடவர்; இத்தனையர் பெண்டிர்; இத்தனையர் சிவப்பர்; இத்த னையர் கருப்பர்; இத்தனையர் நெடியர்; இத்தனையர் குறியர்; இத்தனையர் ஒத்தவர்; இத்தனையர் வேறுபட்டவர் என்றுரைப்பது போன்றது ஒப்பியன் மொழிநூல் (Comparative Linguistics).

ஒரு குடும்பத்தாருள், இன்னார் தந்தையார்; இன்னார் தாயார்; இன்னார் புதல்வர்; இன்னார் புதல்வியர்; இன்னார் தமையனார்; இன்னார் தம்பிமார்; இன்னார் தமக்கையார்; இன்னார் தங்கைமார் என்றிங்கனங் கூறுவது போன்றது வரலாற்று மொழிநூல் (Historical Linguistics)