உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வளவு, வளையம், வளைவி, வளையல், வளைசல். வளையம்-வலய(வ). வளை வணை. வளை-வனை. வனைதல் = சக்கரத்தைச் சுற்றி

மட்கலஞ் செ-தல்.

=

வாள்=வளைந்த கத்தி. வாளம் = வட்டம். சக்கரவாளம் - சக்கரவால(வ.)

வாளி=வட்டமாயோடுகை. வாளி-பாலி(வ.).

வாளி=வளைந்த பிடி, வளையமான அணி. வாளி-வாளிகை=காதணி. வாளி-வாலீ(வ.)

வாளி-வாசி

வள் வண்

=

தெ-வப் படிமை மேல்வளைவு. வாசி-வாசிகை. வணம் - வணங்கு வணக்கு

உடல் வளைவு, வழிபாடு.

=

வணக்கம் வளைவு,

வணங்கு-வாங்கு-வங்கு-வங்கி = நெளிவளையல், வளைந்த கத்தி.

வாங்கி-வாங்கா-வளைந்த ஊதுகருவி.

வங்கு-வங்கம்-வளைவு, ஆற்று வளைவு.

வள்+து வண்டு = கைவளை, சங்கு, வட்டமான அறுகாற் சிறு பறவை, பெருவிரலும் அணிவிரலும் வளைந்த நிற்கும் இணையா வினைக்கை, வளைத்து வைக்கும் வைக்கோற் பழுதை.

வள்+தி = வண்டி= சக்கரம், சகடம். வண்டி-பண்டி-பாண்டி= வட்டு, கூடார வண்டி, உருண்டு திரண்ட காளை. பாண்டி-பாண்டியம் = எருது, உழவு. பாண்டி - பாண்டில் = வட்டம், வட்டத்தோல், தேர்வட்டை, வட்டக்கட்டில், வெண் கலத் தாளம், வண்டி, கிண்ணி, எருது.

வள்-வள்கு-வட்கு. வட்குதல்=வணங்குதல். வட்கார்=வணங்கார்,

பகைவர்

வட்கு-வக்கு-வக்கா = வளைந்த கழுத்துள்ள பறவை.

வக்கா -பக்க(வ.). வக்கா வங்கா.

=

வள்+து = வட்டு வட்டமான சில், வட்டமான கருப்புக் கட்டி. வட்டு – வட் டம் - வட்டன் = உருண்டு திரண்டவன். வட்டம் என்னும் சொல் வட்ட வடிவான இருபதிற்கு மேற்பட்ட காட்சிப் பொருள்களைத் தொன்று தொட்டுக் குறித்து வருகின்றது. திருத்தம், தோறும், விழுக்காடு என்பன வட்டக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துப்பொருள்களாகும்.

வட்டக்கிலுகிலுப்பை, வட்டத்தாமரை, வட்டத்திருப்பி, வட்டத்தாளி, வட்டத்துத்தி, வட்டநரி வெருட்டி, வட்டப்பாலை என்பனவும் பிறவும், தொன்றுதொட்டு வழங்கிவரும் நிலைத்திணைப் பெயர்களாகும்.