உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

97

வடசொற்கள் பிராகிருதங்களிற் கலந்து திரிந்துள்ளன. இவை மேற்படைச் சொற்களேயன்றி அடிப்படைச் சொற்களாகா. வடசொற்களால் சில தமிழ்ச் செற்கள் வழக்கு வீழ்த்தப்பட்டும் இறந்துபட்டும் போனது போன்றே, பல பிராகிருதச் சொற்களும் போயுள்ளன. அதனாற் பிராகிருதங்கள் வடசொற் கலப்பு மிகைபற்றிச் சமற்கிருதக் கிளைகள்போல் தோன்றுகின்றன.

(7) சில வடசொற்கள் பிராகிருத வாயிலாக அடிப்படைத் தமிழ்ச் சொற்களாயின என்பது.

எ-டு. “வட்டம் < Pkt. vatta< Skt. vrtta”

(சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி, ப. 3468)

வகரம் உகரத்தொடு கூடி மொழிமுதலாகாமையால் சுட்டடி வகரமுதற் சொற்களெல்லாம் பெரும்பாலும் பகர முதற் சொல்லின் அல்லது மகர முதற் சொல்லின் திரிபாகவே யிருக்கும்.

எ-டு. பகு-வகு, மிஞ்சு-விஞ்சு.

இங்ஙனமே மல் என்னும் அடி வல் எனத் திரிந்துள்ளது. முல்-மல்-வல். முல்-முர்-முரி. முரிதல்-வளைதல். முரி-முறி. வல்லுதல் = வளைதல். வல் = வட்டு (சூதாடுகருவி). வல்லம்-ஓலைக் கூடை. வல்-வல்லி = வளைந்த கொடி. வல்லி- வல்லீ(வ.)

வல்-வல, வலத்தல் = வளைதல், வளைதல், சுற்றுதல், சூழ்தல்

வல்-வலி வலித்தல்-சுளித்தல். வலி வலிச்சம்=முகச்சுளிப்பு. வல்-வலை சூழும் கயிற்றுப்பொறி.

வல்-வள்

வள்-வள்ளம்=வளைவு, வட்டக் கிண்ணம், படி, மரக்கால்,

சிறுதோணி.

வள்-வள்ளி = கொடி. வள்ளியம் = மரக்கலம்.

வள்-வளவு = வளைவு.

வள்-வளர்-வளரி = வளைதடி. வளர்-வணர் = யாழ்க்கோட்டின் வளைந்த பகுதி. வணர்-வணரி=வளைதடி.

வளர்-வளார்=வளையும் சிறுபோத்து. வளாகம்=வளைந்த இடம்,

பறம்பு

வளி=வளைந்து வீசுங் காற்று. வளி-வசி-வசிவு=வளைவு. வளை-