உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

101

11. வட இந்தியாவிலுள்ளனவெல்லாம் ஆரியம் என்பது.

ஆரியர் வருமுன் வட இந்தியவாணருட் பெரும்பாலார் திரவிடரேயாத லின், வட இந்தியக் கலை நாகரிகக் கூறுகளுட் பெரும்பகுதி திரவிடமே என அறிக.

12. ஆரியம் எல்லாவகையிலும் அளவைப்பட்டது என்பது.

மேனாட்டு நாகரிகம் முந்நூற்றாண்டுக் காலத்ததே அதற்குமுன் உலகிற் சிறந்திருந்தது தமிழ நாகரிகமே.

யாதலின்,

13. நாகரிகம் குறுந்தலை (Brachycephalic) மக்களிடத்திலேயே சிறந்து தோன்றிற்றென்பது.

தமிழ நாகரிகம் குமரிநாட்டிலேயே பெருவளர்ச்சியடைந்துவிட்ட தனால், மாந்தன் நாகரிகம் நீள்தலை (Dolichocephalic) மக்களிடத்தும் தோன் றக்கூடியதேயாம்.

14. கொளுவுநிலை தென்னிந்திய அல்லது சித்திய மொழிகட்கே உரியது என்பது.

கொளுவுநிலை (Agglutination) என்பது பிறவினைக்கேயன்றி எல்லா வினைகட்கும் பெயர்கட்கும் உரியதன்று.

தென்மொழியிலும் சித்திய மொழியிலும் கொளுவுநிலை பிறவினைச் சொல்லின் பின் நிகழின், ஆரியமொழியில் அது வினைச்சொல்லின் முன் நிகழ்கின்றது.

எ-டு: forest, afforest, disafforest, anti-disafforestation, re- anti - disafforestation.

15. சொல்லின் ஈறு பிரியாமை உயர்நிலை என்பது

சொல்லின் ஈறு முன்னிலையினின்று பிரியாது அதனொடு இரண்டறக் கலந்துநிற்பது, சொல்லின் திரிபு முதிர்ச்சியை யன்றி மொழியின் உயர்நிலை யைக் குறிக்காது; புதுத்தண்டின் பூண் பிரியக் கூடிய நிலையையும் துருப்பிடித்த பழந்தண்டின் பூண் பிரியமுடியாத நிலையையும் ஒப்புநோக்கிக்காண்க.

16. இருமையெண் மொழியின் உயர்வளர்ச்சியைக் காட்டும் என்பது.

அநாகரிக மாந்தர் பேசும் முண்டாமொழிகளிலும் இருமையெண் இருப்பதால் அது மொழியின் சிறப்பு வளர்ச்சியைக் குறிக்காது.