உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

17. சொற்பால் அல்லது இலக்கணப்பால் மக்களின் உருவலிப்புத் (Imagi- nation) திறனைக் காட்டும் என்பது.

உயிரில்லாப் பொருள்கட்கு உயிர்த்தன்மையூட்டுவது சிறுபிள்ளைகட் கும் இயல்பாம்.

18. சொல் இயல்பாகப் பொருளுணர்த்தும் என்பது.

ஒருசில ஒலிக்குறிப்புகளன்றிப் பிற சொற்களெல்லாம் கற்றாலன்றிப் பொருளுணர்த்தா.

19. மொழியலகு (unit of speech) சொற்றொடர் அல்லது சொல்லியம் (sentence) என்பது.

ஒவ்வொரு சொல்லாகவே மொழி தோன்றியிருப்பதனாலும், கருத்தை ஒரு தனிச்சொல்லும் உணர்த்துமாதலாலும் சொல்லே மொழியலகாம்.

20. எண்ணத்திற்கு மொழி இன்றியமையாத தென்பது.

ஊமையர் உள்ளத்திலும் எண்ணம் நிகழ்வதாலும் விலங்கு பறவை களும் எண்ணி வினை செ-வதாகவே தெரிவதனாலும், மொழியின்றியும் எண்ணம் நிகழக் கூடியதே.

2. நெறிமுறைத் தவறுகள்

(1) எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பது. தமிழில் எல் லாச் சொற்களும் வேர்ப் பொருளுணர்த்துவதாலும்,

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.

“மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா

என்று தொல்காப்பியங் கூறுவதாலும், இந் நெறிமுறை தவறானதாம்

(610)

(877)

(2) எல்லா மொழிகளும் ஆயிரவாண்டிற் கொருமுறை அடிப்படைச் சொல் உட்பட முற்றும் மாறிவிடுகின்றன என்பது.

தமிழ் பல்லாயிரம் ஆண்டாக மாறாதிருப்பதால், இதுவும் தவறானதே.

(3) பொதுமக்கள் பேசுவதே மொழி என்பது.

வரலாற்றிற் கெட்டாத பண்டைக் காலத்திலேயே, உயிரும் உயிரில்லதும் உயிருள்ளதுமாகவுள்ள மூவகை இயற்கைப் பொருள்களை