உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

என்பது.

இதன் விளக்கம் வருமாறு:

107

ஒரு மொழியின் முதற்றகை அடிப்படைச் சொற்கள் ஆயிரவாண்டிற் கொருமுறை நூற்றிற்கு 19 விழுக்காடு இறந்தபடுகின்றன. இரு மொழிகள் பிரிந்துபோ- ஆயிரவாண்டிற்குப்பின் பழம்பொதுச் சொற்றொகுதியில் நூற்றுமேனி 19 இழந்து, 81 தனித்தனி போற்றிக்கொண்டிருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். மூலப் பொதுத் தொகுதி 200 சொற்கொண்டதென் றால், முதலாம் மொழி இரண்டாம் மொழியைப் போன்றே 162 சொற்களை வைத்துக்கொண்டிருக்கும் ஆயின் இருமொழிகளும் ஒரே தொகுதியான சொற்களை இழக்கு மென்று எண்ண இடமில்லை. பெரும்பாலும் நேரக் கூடியபடி, இரண்டாம் மொழி முதலாம் மொழி வைத்துக்கொண்டிருக்கும் 162 சொற்களிலும் இழந்து போன 38 சொற்களிலும் நூற்றுமேனி 81ஐத் தாங்கி நிற்கும். அங்ஙனமாயின், இரு மொழிகளும் ஏறத்தாழ மூலத் தொகு தியில் நூற்றுமேனி 132ஐ அல் லது 66ஐப் பொதுவாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இக் கணிப்பைத் தலைகீழாக மாற்றி, மூலச் சொற்றொகுதியில் நூற்று மேனி 66 இரு மொழிகட்கு இனச் சொற்களாயிருந்தால், அவை பிரிந்துபோ- ஆயிரம் ஆண்டாயிற்றென்றும்; நூற்றுமேனி 44 இனச் சொற்களாயிருந்தால், அவை ஈராயிரம் ஆண்டிற்குமுன் பிரிந்தனவென்றும், அறிந்துகொள்ளலாம்.

இது எத்துணை உன்னிப்பைத் (guess) தழுவியதென்பதையும் எங் ஙனம் உண்மைக்கு மாறாக இருக்கக்கூடும் என்பதையும், பகுத்தறிவாளர் கண்டுகொள்க.

(12) மொழித் தோற்றம் மொழிநூற்கு அப்பாற்பட்டு உடலியல் மாந்த னூலைத் தழுவியதென்பது.

மாந்தன் கீழினத்தினின்று தோன்றாது இறைவனாற் படைக்கப் பெற்றா னென்று கொள்ளின் இக் கொள்கை முற்றும் வழுவாதல் காண்க.

தமிழ்போலும் இயன்மொழியை

அடிப்படையாகக் கொள்ளாது, ஆரியம் அல்லது சமற்கிருதம் போலும் திரிபில் திரிபான மொழியை அடிப் படையாகக் கொண்டு ஆ-ந்ததின் விளைவே, இம் மம்மருக்கும் மயலுக்கும் கரணியம் என அறிக.