உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

8. ஒரு குடும்ப மொழிகளின் பொதுவியல்பைக் கொண்டு அவற்றின் தா-மொழியை மீள அமைக்கலாம் என்பது.

இது, இறந்துபோன ஒரு தாயின் உருவப்படத்தை அவள் புதல்வி யரின் உருவப்படங்களை ஒப்புநோக்கி அமைக்கலாம் என்பது போன்றதே.

இனி, வண்ணனை மொழிநூலார் வரலாற்றரா-ச்சியை அடியோடு விட்டுவிட்டமையால். ஒரு குடும்ப மொழிகளின் மூலமொழி யிருக்கும் போதே அதையறியாது வேறொரு புதுமொழியை ஆக்கித் தாயாகக் காட்டு கின்றனர்.

9. ஒரு சொல்லின் வடிவும் பொருளும், ஓரிலக்கியத்தில் முந்திவரின் முந்தியவையென்றும், பிந்திவரின் பிந்தியவையென்றும் கொள்வது.

ஒரு புதுமொழியில் புதிது புதிதாகச் சொல்லும் பொருளும் தோன்று வதால், அதற்குத்தான் இந் நெறிமுறை பெரும்பாலும் ஏற்கும். முழுவளர்ச்சி யடைந்த ஒரு முதுமொழியில், ஒரு சொல்லின் பொருள்கள் அவை தோன்றிய வரிசையிலன்றி இடத்தின் தேவைக்கேற்ப ஆளப்பெறுவதால், அவற்றினின்று அவற்றின் முன்மை பின்மையை அறிய முடியாது.

பள்ளி என்னும் சொல்லின் இருபது பொருள்கள் இடைப்பட்டதான இடம் என்பது, இன்றுள்ள முதல் தொன்னூலாகிய தொல்காப்பியத்தில்,

“சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

என்று வந்திருத்தல் காண்க.

(102)

(10) ஓரெழுத்து இன்னோரெழுத்தாகத் திரியும் திரிபில் ஒருவழிப் போக்கையே கொள்வது.

மேலையாரிய மொழிகளிற் பொதுவாகக் ககரம் சகரமாகத் திரிந்துள்ளது. ஆயின், இந்திய மொழிகளில், சிறப்பாகத் தென்மொழியில் அவை இருவழிப் போக்காகவுந் திரியும்.

செம்பு - கெம்பு

கீரை - சீரை (ம.)

செ- கை கெடு - செடு (தெ.)

(11) சொன்மாற்றக் காலக்கணிப்பால் (Glottochronology) இன மொழிகள் ஒன்றினின்றொன்று பிரிந்துபோன காலத்தைக் கணித்தறியலாம்