உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

தமிழ்

மகன் மக்

மண்டை மட்

துடவம் (நீலமலைவாணர் மொழி)

முள்-மள்-மழ-மக-மகன்-மக்.

மொள்-மொண்டை(மொந்தை)-மண்டை-மண்ட்-மட்.

105

(6) வா-ப்பயிற்சியால் எல்லா மொழியொலிகளையும் ஒருவர் பயின்று கொள்ளலாம் என்பது.

சில மொழியொலிகள் அயல்நாட்டு மக்களால் ஒலிக்க இயலாமையால், அவற்றை அவை வழங்கு நாடுகளிற் பல்லாண்டோ சில தலைமுறையோ குடியிருந்துதான் பயிலமுடியும்.

ஓர் அமெரிக்கர் சென்னையில் அண்ணாமலைநகருக்குப் புகை வண்டிச் சீட்டு வாங்க வேண்டியவர் தவறாக ஒலித்ததனால், ஆனைமலக்கு வாங்கிச் சென்றுவிட்டார்.

7. அயன்மொழிச் சொற்களுள் சிலவற்றின் வடிவுகொண்டு, பிறவற்றின் வடிவையும் ஒத்தமைவு (Analogy) முறையில் அமைத்துக் கொள்ளலாம் என்பது.

இலக்கண வகையில் ஒத்தசொற்கள் பொதுவாக ஓரொழுங்கு பட்டிருப் பினும், சிறுபான்மை நெறிக்கு விலக்காகவு மிருப்பதால், ஒத்தமைவுமுறை எல்லாவிடத்துஞ் செல்லாததாகும்.

சொற்புணர்ச்சி

எ-டு:

வலிமிகல்

வாழைப்பூ

அவரைக்கா-

புன்னைத்தோப்பு

இறந்தகால வினையெச்சம்

சொல் - சொல்லி

நில் - நின்று

மெலிமிகல்

தாழம்பூ (தாழை+பூ)

துவரங்கா- (துவரை+கா-)

தென்னந்தோப்பு (தென்னை+தோப்பு)

தெள் - தெள்ளி

கொள் - கொண்டு

வில் - விற்று

கள் கட்டு