உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

இது எல்லாக் கீழ்மக்களின் தீய ஒழுக்கங்களையும் இழிந்த பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்றதே. நரிக்குற வன் நடைமொழியையெல்லாம் ஆரா-வதினும், நகராண்மைக் குப்பை யைக் கிளைப் பின் ஏதேனும் நற்பொருள் கிடைப்பது திண்ணம்.

முத்திற மொழிநூல்போல் வண்ணனை மொழிநூற்குப் போதிய ஆரா-ச் சிக்கிடம் இன்மையாலேயே, இத்தகைய இழிதகைய ஆரா-ச்சியில் இறங்கியுள்ளனர். இது “வேலையில்லாத மஞ்சிகன் (அம்பட்டன்) வெண்கழு தையைப் பிடித்துச் சிரைத்தானாம்" என்னும் பழமொழியையே நினை வுறுத்துகின்றது.

இனி, நடைமொழிகளையும் ஒரு வரைதுறையின்றி, வட்டார நடை மொழி (Regional Dialect), உள்ளூர் நடைமொழி (Local Dialect), வகுப்பு நடைமொழி (Class Dialect), குமுக நடைமொழி (Communal Dia- lect), குடும்ப நடைமொழி (Family Dialect), தனிப்பட்டவர் நடை மொழி (Personal Dialect), எனப் பலவாறு வகுத்துள்ளனர் மேலையர். தமிழர்போல் ஒரு சிறந்த இலக்கண நடைமொழியை அளவைப்படுத்திப் பேச்சுவழக்கையும் பலுக்கல் (உச்சரிப்பு) முறையையுங் கட்டுப்படுத்தாது, சண்டிக் குதிரையும் பட்டிமாடும்போல் போன போன போக்கெல்லாந் திரியவிட்டுக் கீழோர் வழக் கையும் மேலோர் வழக்கொப்பக்கொண்டு, அவற்றை எழுத்துவடிவில் எழுதிக் காட்டவும் வழியின்றி இடர்ப்படுவது எத்துணைப் பண்பாடற்ற செயலாம்.

(5) மலைவாணர் முந்தியல் மாந்தர் என்பது.

தமிழரின் முந்தியல் (primitive) நிலைமை குமரிநாட்டிலேயே கழிந்து விட்டமையாலும். போருக்குங் கொள்ளைக்குந் தப்பிக் கீழிருந்தே சில வகுப்பார் மலையேறி வாழ்வதாலும், மலைவாணர் மொழிகளெல்லாம் மொழியின் முந்துநிலையைக் காட்டாது திரிபு நிலையையே காட்டுவதாலும், மலைவாணர் முந்தியல் மாந்தரல்லர் என்பது தெள்ளத் தெளிவாம்.

எ-டு: தமிழ் பிராகுவீ (பெலுச்சித்தான மலையடி வாணர் மொழி.

செவி கவ்

வா-கள் பாக்

வழி-வயி-வா- --பா--பா

கள் (பன்மையீறு)-க-க

7