உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வண்ணனை மொழிநூல் புதிதாக வந்ததென்று அதைப் போற்றுவது, திரைப்பட நடிகையர் மேற்கொள்ளும் மானக்கேடான புதிய உடைமுறை களையெல்லாம் புது நாகரிகக் கோலமென்று புகழ்வதையே ஒக்கும்.

கருவிகள் இயக்கப்படின் நிறுத்தும்வரை அல்லது தாமாகக் கெட்டு நிற்கும்வரை ஒரே வகையாக இயங்குமேயன்றி, சூழ்நிலைக்கேற்ப நிற் பதும் இடம்பெயர்வதுஞ் செ-யா. தாமாக இயங்கா ஒலிமானிகள் கையா ளப்பெறின் ஒருசில திரிபுகளைக் காட்டுமேயன்றி, எல்லாத் திரிபுகளையும் ஏறுமாறான திரிபுகளையும் காட்டா. எழுத்துகளின் பல்வேறு திரிபுகளை என் ‘தமிழ் வரலாறு' என்னும் நூலிற் காண்க. ஏறுமாறான திரிபுகட்கு எடுத்துக்காட்டு வருமாறு;

வழுநிலை

உ - இ: புல்-பில்

உ: பிள்ளை - புள்ளை

ஒ: குடை - கொடை

ஒ - உ: கொடு-குடு

வழாநிலை

G

@

- இ: புரண்டை - பிரண்டை

உ: பிறகு -புறகு

உ - ஒ : துளை-தொளை

ஒ உ: பொட்டு - புட்டா (புள்ளி)

(4) வண்ணனை மொழிநூலார் கண்டவை

வண்ணனை மொழிநூலைச் சிறப்பாக வளர்த்துவரும் அமெரிக்கர் கண்டவையெல்லாம் எழுத்திற்கு ஒலியும் வரியும் என இருவடி வுண்டென் பதும், ஒவ்வோர் ஒலிக்கும் வேறுபட்ட வரிவடிவிருத்தல் வேண்டுமென் பதும், ஆங்கில நெடுங்கணக்குத் தவறானதென்பதும், எழுத்தொலிகளை யும் வா-மண்டலத்தையும் நுண்பாகுபாடு செ-ததுமே.

இவற்றுட் பெரும்பாலானவும் பிறவற்றிற்கு அடிப்படையானவும் கி.மு.10,000 ஆண்டுகட்கு முன் தமிழர்கண்டவையே. ஆயின், வண்ணனை மொழிநூலார் இவற்றிற்கு இட்டுள்ள புதிய ஆரவாரப் பெயர்களைக் கண்டே இந்திய இளைஞர் மருண்டு வியக்கின்றனர்.

எழுத்தின் ஒலிவடிவிற்குப் போனீம் (phoneme) என்றும் வரிவடி விற்குக் கிராப்பீம் (grapheme) என்றும், கிளவியின் சொல்வடிவிற்கு மார் பீம் (morpheme) என்றும், பொருள் வடிவிற்குச் செமன்றீம் (semanteme) என் றும், பெயரிட்டிக்கின்றனர்.

எழுத்து என்பது பொதுவாகத் தமிழில் ஒலியைத்தான் குறிக்கும். வேண்டுமாயின், ஒலிவடிவை ஒலியன் என்றும் வரிவடிவை வரியன் என் றும் குறிக்கலாம். இதனால் தமிழ் பெற்ற சிறப்பும் வளர்ச்சியும் ஒன்று மில்லை.