உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

111

சார்பெழுத்துகள் மூன்றனுள் உயிர்வழிப்பட்ட இரண்டையும் (குற் றியலுகரம், குற்றியலிகரம்) அல்லொலியன்கள் (allophones) என்னலாம்.

தமிழ்நெடுங்கணக்கும் அதைத் தழுவிய (சமற்கிருதம் உட்பட்ட) ஏனையிந்திய மொழி வண்ணமாலைகளும் ஒலியன் முறைப்படி அமைந் தனவே. அமெரிக்கர் இதையறியாது, வண்ணனை மொழிநூற் பள்ளிகளில் இந்தியமொழிகட்கும் ஒலியன் கண்டுபிடிக்கப் பயிற்சி கொடுக்கின்றனர். சமற்கிருத எழுத்துகளுள் சில உயிர்களும் சில மெ-களும் புணரொலி யன்களாகும் (compound phonemes). இது சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவிய ஏனை யிந்திய மொழிகட்கும் ஒக்கும்.

எழுத்துகளின்,

பிறப்புப்பற்றி வா-மண்டலத்தைத் தமிழிலக்கண நூலார், குமரிநாட்டிலேயே, அடியண்ணம் (dorsal), இடையண்ணம் (fron tal), நுனியண்ணம் (apical), பல் (dental), இதழ் (labial) என ஐங் களமாக வகுத்திருந்தனர். மேலையர் இன்று கூட்டியிருப்பது தொண்டை (faucal) என்னும் ஒன்றே. எழுத்தொலிகளின் பிறப்பு முயற்சியையும் பண்டைத் தமிழர் செவ்வையாக அறிந்திருந்தனர்.

சென்ற நூற்றாண்டில் நெசுபீல்டு (Nesfield) ஆங்கில உயிரொலிகள் 20 என்றும் மெ-யொலிகள் 25 என்றும் வரையிட்டார். இது கிளீசன், ஆங்கில மெ-கள் 24 என்றும் ஆங்கில வுயிர்வகைகள் 36 என்றும் காட்டுவர். நெடில்களை அவர் சேர்க்காமையால் உயிர்கள் 45 ஆயினும் ஆகலாம்.

இங்ஙனம் ஆங்கில மக்களின் பல்வேறு ஒலிப்பு வேறுபாட்டையும் கணக்கிற் சேர்த்திருப்பதால், ஆங்கில வுயிர்கள் நுண்வகைகளை நாவின் உச்சிநிலையைக் கொண்டு, வாயின் மேல்கீழாக மேல் (high), இடை (mid), கீழ் (low), என்றும், முன் பின்னாக முன் (front), நடு (central), பின் (back) என்றும், வகுத்துக் காட்டுகின்றனர்.

இனி, பேசுவதும் கேட்பதும்பற்றி எழுத்தொலியத்தைப் (phonetics) பலுக்கொலியம் (articulatory phonetics) என்றும், கதுவொலியும் (acoustic phonetics) என்றும், இருபிரிவாகப் பிரித்திருக்கின்றனர். இவற் றுள் முன்னது மொழிநூலையும் பின்னது பூதநூலையும் (physics) சாரும்.

இனி, எழுத்துகளை இடம் அல்லது உறுப்புப்பற்றியும் முயற்சி பற்றியும் தன்மைபற்றியும் வெவ்வேறு சிறு வகுப்பாக வகுத்து, அதற்கேற்பப் பெயரும் இட்டிருக்கின்றனர்.