உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

உலகத்தமிழ்ப் பேரவைகள்

1. அனைத்துலகத் தமிழ்ப்பேரவை

தகடூர்ச் (தருமபுரி) சித்தமருத்துவர் செல்லையா, அவர்கள், 1961ஆம் ஆண்டிலேயே 'அனைத்துலகப் பேரவை' என்னும் பெயர்கொண்ட உலகத் தமிழ்ப் பேரவையைத் தோற்றுவித்தார். ஆயின், பொருட்டுணை இன்மையால் அவர் தமிழ்ப்பற்றும் ஊக்கமும் அதற்குமேல் வினையாற்ற வியலாதுபோயின.

2. உலகத் தமிழ்ப்பேரவை

உண்மையான தமிழ்ப்பற்றின்றி உலகப் புகழ்பெற வேண்டுமென் பதையே குறிக்கோளாகக் கொண்ட அப்பர் (Father) தனிநாயகம், தமிழறி யாத வரும் வடமொழி யார்வலருமான திரு. பில்லியோசா (J. Filliozat) என்னும் பிரெஞ்சுப் பேராசிரியரைத் தேடிப் பிடித்து, அவரைத் தலைவ ராகக்கொண்ட 'உலகத் தமிழ்ப் பேரவை' என்னும் அமைப்பகத்தை 1965-ல் நிறுவினார்.

அர். தனிநாயகம் தமிழ்ப்பற்றற்றவர் என்பதற்குச் சான்றுகள்:

(1) சென்னைப் ப. க. க. த. அகரமுதலியின் குற்றங்குறைகளை நான் நேரில் எடுத்துக் கூறியும் பொருட்படுத்தவில்லை; அவற்றைத் திருத்த எம் முயற்சியுஞ் செ-யவில்லை.

(2) முதலுலகப் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கிற்கு என்னை அழைக் கவே

யில்லை.

பலர்

(3) இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கிலும், வேண்டுகோட்கிணங்கி என் பெயரைச் சேர்த்தும், எனக்குரிய இடந்தரவில்லை.