உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

"யாதும் ஊரே

117

ஊரே யாவரும் கேளிர்” என்கிற தமிழ் மூதுரையில் பொருத்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே உலகம் என்னும் நம்வாழ்வு உயர்வுநவிற்சியற்ற காட்சியை வழங்குவதே நம்முடைய

முறையின்

நோக்கமாக இருக்க வேண்டும்.'

இவ் விரு குறிப்புகளுள் முந்தினதொன்றே, இம்மாநாடு வையாபுரி கூட்டத்தால் நடத்தப்பட்ட தென்பதற்குப் போதிய சான்றாகும்.

மேனாட்டறிஞர் எல்லாரும் அறிவியல் முறைப்பட்ட நடுநிலை மொழி யாரா-ச்சியாளர் அல்லர். இஞ்சிவேர், சுவணம், வடவை முதலிய சொற் கட்கு மானியர் வில்லியம்சு சமற்கிருத -ஆங்கில அகரமுதலி காட்டியிருக்கும் மூலங்களும், இவற்றுள் முதற்சொல்லிற்கு ஆக்கசுபோர்டு சிற்றகர முத லியும் சேம்பெர்சு இருபதாம் நூற்றாண்டு அகரமுதலியும் காட்டியிருக்கும் மூலங்களும், பொதுவாக மேனாட்டார் மொழித்துறையிற் பிராமணர் கூறி யிருப்பதைக் குருட்டுத்தனமாக நம்புபவர் என்பதையே புலப்படுத்தும்.

இஞ்சிவேர்

=

இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். நீரை உட்கொண்டிருந்தலாலும் வேரானதாலும் இஞ்சிவேர் எனப்பட்டது.

இஞ்சிவேர் -L. zingiber, Gk. zingiberis, LL. and OE. gingiber, Skt. srngavera.

"sringa,.... the horn of an animal .....vera,....ginger (undried or dry). -S.E. D:

"ginger,...... OE and LL. gingiber f. L. zingiber f. G.k. ziggiberis f. Skt. srngavera (srnga = horn, vera= body) -C.O. D.

“Ginger,...... M. E. gingivere - O. Fr. gengibre -LL. gingiber -L. zingiber -Gk. zingiber, perh. Skts. sringa, horn, vera, shape -Malay inchiver."

சமற்கிருதத்தில் ச்ருங்க என்பது கொம்பையும் வேர என்பது உடம் பையும் குறிக்கும். இதனால், இஞ்சிவேர் என்பதை ச்ருங்க வேர என்று திரித்து, மான்கொம்பு போன்றது என்று பொருட்கரணியங் கூறியிருக்கின்ற னர் வடவர். பரவெளிச் செலவு நிகழும் இவ் விருபதாம் நூற்றாண்டிலும் இப் பொருந்தாப் பொ-த்தலை நம்பும் மேலையர் எங்ஙனம் அறிவியற்பட்ட நடுநிலையாரா-ச்சியாளர் ஆவர்?