உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

கூட்டத்திற் புலவர்க்கு நிகழ்ச்சியில்லாது போனதும், மாநாட்டின் அரசியற் சார்பை விளக்கிக் காட்டும்.

2. வடிப்புக் குழுத் (Screening Committee) தலைவர் பெரும் பாலும் தமிழ்ப் புலமையும் தமிழ்ப் பற்றும் இல்லாதவரா யிருந்தமை.

குழு மொழிநூல்

இலக்கியம்

குமுகாயவியல்

கலையும் தொல்பொருள் நூலும்

அறிவியலுங் கம்மியமும்

வெளிநாட்டு வணிகமும்

கலை நாகரிகத் தொடர்பும்

ஒப்பியற்கல்வி

தமிழ்க்கட்டுரைகள்

தலைவர்

பர். சுநீதிகுமார் சட்டர்சி

பேரா. கோ.சுப்பிரமணியப் பிள்ளை

பர். கே. கே. பிள்ளை பேரா. பி. சாம்பமூர்த்தி

பர். என். நடராசன்

பேரா. சேவியர் எசு. தனிநாயகம்

பர். எசு. என். கத்திரே

பேரா. லெ. பெ. கரு. இராமநாதன் செட்டியார்

இவ் வெண்மருள் மூவரே தமிழ்ப் புலவர், ஏனையருள் ஒருவர் தமிழ் நாட்டுப் பிராமணர்; ஒருவர் கொங்குணிப் பிராமணர்; ஒருவர் வங்கப் பிராமணர். இம் மூவருள் சமற்கிருத வெறியரான தமிழ்ப் பகைவார் கிரேக்கத்தி லிருந்து இயற்றமிழும் வேதத்தினின்று இசைத்தமிழும் தோன்றின என்பவர்.

3. மாநாட்டுக் கட்டுரையொழுங்குபற்றிய அறிவிப்பிதழில் தமிழின் தொன்மையை மறைக்கவேண்டு மென்னுங்கருத்து வெளியிடப்பட்டமை.

"உலக அறிஞர்கள், குறிப்பாக மேலைநாட்டு அறிஞர்கள், எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கண்டிப்பான நெறிமுறையின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்றும், அறிவியல் முறையில் ஆரா-ந்து பார்த்துந்தான் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய பழங்குடி என்பது போன்ற தக்க ஆதாரமில்லாத தற்பெருமையான கூற்றுகள், எதையும் அறிவியல் அடிப்படையில் ஆரா-ந்து பார்க்கும் நம்முடைய தகுதியிலும் திறமையிலும் அவநம்பிக்கைதான் ஏற்படச் செ-யும்.'