உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

எ -டு:

தமிழ்

செந்து (Zend) தமிழ்

பாரசீகம்

அதர்

அத்வன்

ஆயிரம்

ஹஸார்(Z)

இதா (இங்கே)

இத

கவுதாரி

கௌதார்

கரடி

சர்ஸ்(chars)

தூணி

த்ரவோண

பற

பத்

கழுகு

கெர்கி

பரி(வட்ட)

புரை (உயர்வு)

பைரி

குருடு

கூர்

பெரெஸ்(Z)

சுவர்

தீவார்

மிகு

மிஹ்

சுடு

ஸுஸுன்

பூ (தோன்று) நமத்த

பூ (b)

நப்த

பல் -பல முகர்

பரு

முஹர்

121

பொருளிலக்கணத்தையும் புலனெறிவழக்கத்தையும் கழகச்செ-யுட் கும் உலக வழக்கு மொழிக்குமுள்ள வேறுபாட்டையும் தக்க தமிழ்ப்புலவர் வா-க்கல்லாத பர். காமில் சுவெலபில், ஏற்கெனவே தமிழைப்பற்றித் தமக் குள்ள திரிபுணர்ச்சியை, தம் சொந்த ஆரா-ச்சி வெளியீடுகளிலும் பர்.சேதுப்பிள்ளை நினைவு மலரிலும், 'தமிழின் வரலாற்றிலக்கணக் கட்டுரைகள் (Lectures on Historical Grammar of Tamil) என்னும் தம் சுவடியிலும், பரக்கக்காட்டி, அதற்கு முடிமணியாக இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரை யொன்றில்,

“ஒருவரின் தா-மொழிப் பற்றும் சொந்தக் கலைநாகரிகப் பற்றும் மிக ஏதப்பாடுள்ளதும் வழிவிலகியதுமான ஒரு திருப்பத்தை அடையக் கூடும். மறைமலையடிகளும் ச. சோ. பாரதியும் பாரதிதாசனும் தொடங்கிய போக்குகள், அஞ்சத்தக்க அளவு விரிந்து பரவி உண்மையான தாராளப் படைப்புத் திறனைக் கொன்றிருக்கின்றன. அரசியல் மொழியியல் பண்பாட்டி யல் அல்லது கலையியல் தொடர்புறவுத் தடைகள் என்றேனும் நாளடைவில் வெற்றி பெற்ற தில்லை. அவை அணித்தாகவோ பிந்தியோ வீழ்ந்து விடுவது திண்ணம்” என்று சிறிதும் அடக்கவொடுக்கமின்றிச் சிறுபட்டித் தனமாகக் கூறியுள்ளார். 'நூறாண்டு திரவிட மொழியாரா-ச்சி' என்னும் சுவடி யிலும், மனை, mansion என்னும் சொற் கட்குள்ள தொடர்பைக் கண்டு பிடித்த பர்.சி. யூ. போப்பைக் கண்டித் திருக்கின்றார்.