உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

இதுவரை, அறிவியலாரென்றும் நடுநிலையாளரென்றும் உண்மை யறிந்து நமக்கு உதவுவாரென்றும் நாம் நம்பியிகுந்த மேலையர், இங்ஙனம் ஏமாற்றத்தை விளைவித்து "இனம் இனத்தோடு சேரும்" என்பதற்கேற்ப ஆரியரொடு கூடிக் கொண்டு, தமிழுக்கு மாபெரு மலைபோலுள்ள மறை மலையடிகளையும் கண்ணுங் கருத்துமின்றிக் கண்டிக்குமளவு கெட்டு விட்டாரெனின், இனிமேல் மிக விழிப்பா- இருந்து 'தன் கையே தனக்கு தவி” என்னும் நெறிமுறையையே இறுகக் கடைப்பிடித்தல் வேண்டும்.

நற்றிணையென்னும் கடைக்கழகச் செ-யுட் டொகையையும், ‘நாலு வேலி நிலம்' என்னும் கொச்சைத் தமிழ் நாடகக் கதையையும், கருவியாகக் கொண்டு, உலக உரைநடை யமைப்பை வகுத்த கோமாளிக் கூத்தர் பர். காமில் சுவெலபில் என அறிக.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் துணைத்தலைவர் தக்கவராயிருந்தால் இந் நிலைமை நேர்ந்திராது. சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் பர். காமில் சுவெலபிலைத் தப்புந்தவறுமாகச் சொற்பொழி வாற்ற விட்டதும், அச் சொற்பொழிவுகளைப் பல்கலைக்கழக முத்திரையிட்டு வெளி யிட்டதும், அவருக்கு மிகுந்த துணிச்சலை உண்டுபண்ணிவிட்டன. இதனாலேயே அவருக்கு இசைந்த மூவரை இக்கால தமிழ்ப்புலவராகப் புகழ்ந்துள்ளார்.

முப்பெருந்

அம் மூவருள், ஒருவர் இலக்கணமும் மொழிநூலுங் கல்லாதவர்; ஒருவர் ஆரிய அடிப்படையில் தமிழ் கற்றவர்; ஒருவர் சொந்த மொழி யாரா-ச்சி யில்லாதவர். இந் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப்பெரும் புலவர் மறைமலையடிகளும் உ.வே. சாமிநாதையருமான இருவரே.

தமிழின் சொல்வளத்தையும் தனிப்பெருந் தூமையையும் ஆரியச் சொற்கலப்பால் அதற்கு நேர்ந்துள்ள அழிவுநிலையையும் அறியாத மேலை யர், தம் மொழிபோல் தமிழையும் கருதிக்கொண்டு அதன் தூ-மையைத் தாக்குவது, பொதுமகள் குலமகளின் கற்பைப் பழிப்பது போன்றதே.

8. மாநாட்டு ஊர்வலக் காட்சியில் பிற்கால ஐம்பெரு வனப்புகளைத் தமிழ்த்தாயின் மக்களாகக் காட்டியமை.

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள எழுவகை நிலத்திற்கு எண் வகை வனப்பிற்கும் இலக்கியமாயிருந்து இறந்துபட்ட ஏராளமான இரு வகைத் தொடர்நிலைச் செ-யுள்களே ஆரிய வருகைக்கு முற்பட்டுச் சொல் லிலும் யாப்பிலும் பொருளிலும் கருத்திலும் முழுத் தூ-மையான மணிச் சே- களாகும்.