உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

தமிழன் பிறப்பில் தாழ்ந்தவன் என்றும், கைத்தொழிற்கும் பிராமணனுக் கும் தொண்டு செ-வதற்குமே கடவுளாற் படைக்கப்பட்டவன் என்றும், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வந்ததன் விளைவாக, பழந்தலை முறையிற் பெரும்பான்மையரும் புதுத்தலைமுறையிற் சிறு பான்மையரும், பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் ஆகிய மூவகக் கரண வியல்புகளையும் அறவே இழந்துள்ளனர். அதனால், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் அரசும் தமிழை வடமொழியினின்று மீட்டு வளர்க்கவும் வளம்படுத்தவும் முற்றும் ஆற்றலில்லாதனவா யிருக்கின்றன.

இந் நிலையில், தமிழை மீட்டற்கும் மீண்டும் அரியணையில் அமர்த் தற்கும், புலமக்களும் பொதுமக்களும் சேர்ந்த மாநிலத் தமிழ்க்கழக அமைப்பு இன்றியமையாததாகின்றது. இக் கழகம், நாளடைவில் வெளி நாட்டுத் தமிழ் மன்றங்களும் இணைக்கப்பட்டு உலகத் தமிழ்ப் பெருங் கழகமாக மாறல் வேண்டும்.

“தூங்கினவன் கன்று சேங்கன்று” என்பதற்கேற்ப, மறைமலையடிகள் கூட்டத்தார் உலகத் தமிழ்மாநாடு நடத்தாதிருந்தமையால் வையாபுரி கூட்டம் அவ் வுரிமையைக் கவர்ந்து ஈருலகத் தமிழ் மாநாடுகளையும் நடத்தித் தமிழைத் தன் விருப்பம்போற் கெடுத்துவிட்டது.

ஆதலால் இனி ஏற்படவிருக்கும் மறைமலையடிகள் கூட்டத்தின் உலகத் தமிழ்ப் பெருங்கழமே, எதிர்கால உலகத் தமிழ் மாநாடுகளையும் கருத் தரங்குகளையும் கூட்டி நடத்துதல் வேண்டும். அதற்கு முன்பே, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தினின்று வண்ணனை மொழிநூலும் ஆட்சித் திட்டத்தினின்று வையகம் வரையறவாக விலக்கப்படல் வேண்டும். இதற்கு மொழிப்புரட்சி இன்றியமையாதது.

இற்றை மாணவரே எதிர்காலக் குடிவாணரும் அரசினருமாதலால், தமிழ மாணவரே உலகத் தமிழ்ப் பெருங்கழக அமைப்பிலும் பணியிலும் பேரளவாக ஈடுபடல் வேண்டும்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்பதே தமிழரின் வாழ்க்கை அடிப்படை நெறிமுறையாதலால், தமிழ்நாட்டுப் பிராமணர் தம் முன்னோ ரின் தவற்றை யுணர்ந்து மனமாறித் தமிழ்நாடு வாழத் தமிழரொடு கூடி வாழ்ந்து ("When you are at Rome, do as Rome does.') நக்கீரரும் பரிதிமாற் கலைஞனாரும்போல் தூய தமிழராகித் தமிழை வளர்த்து, உடன் பிறப்புப்போல் உளமொத்து என்றென்றும் இன்புறுவாராக.