உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தெனச் சீரிய மறைமலை செந்தமிழ் உணர்த்தவிட் டோரின மாயர சுறுந்தமி ழினமே.

குமரி நிலமொழியைக் கூறுந் தமிழன் குமரி வரலாறு கொண்டே – குமரித்

தமிழையுந் தன்னையுந் தாங்கித்தற் காக்கும் அமரிலும் வெல்லும் அறி.

பண்பட்ட செந்தமிழாற் பைந்தமிழா முன்னேறக் கண்கொட்டுங் காலுங் கவலையுறேல் - புண்பட்டும் மாறா யிருப்பவெலாம் மாற்றிப் புரட்சிசெயச் சூறா வளிபோற் சுழன்று

வண்ணனைக் கூற்று வழூஉ மொழியியலை

விண்ணவர் போற்றினும் வேண்டற்க

எண்ணிப்

பகுத்தறிவா லந்நூல்செ- பைந்தமிழ்க் கேட்டை வகுத்தவர லாற்று வழி.

முப்பல் கலைக்கழக முட்டாத் தமிழ்த்துறையும் செப்புத் தனித்தமிழர் சேர்ந்திடுக – தப்பின்

அடியோடு முக்கழகும் ஆரியம் நீங்கி

முடிசூட முத்தமிழ் முந்து.

(முற்றும்)

127