உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

பெற்றிருப்பினும், உரைநடைச் சொல்லாக்கத்திற்கும் ஒத்த தோன் றல் திரிதல் கெடுதல் வகைகளே.

இனி, சொற்கள் மட்டுமன்றிச் சொல்லுறுப்புகளும் வெளிப்படை யாகவும் குறிப்பாகவும் பொருளும் பொருட்கரணியமுங் கொண்டனவே யென்று தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஆ-ந்து கண்டனர். சில சொற் கட்கு நோக்கியமட்டில் வேர்ப்பொருட் கரணியம் தோன்றாவிடினும், ஆழ்ந்து கூர்ந்து ஆரா-ந்தால் அதைக் கண்டுகொள்ளலாமென்றும் ஆரா-ச்சி யா ளரை ஊக்கினர். பொருட்பாடுபற்றிச் சொற்களை ஒருபொருட் பலசொல் (syn- onyms), பலபொரு ளொருசொல் (homonym) என்றும் பகுத்தனர்.

ரியர் வந்து தமிழ்நாட்டில் தங்கியபின், தமிழைக் கெடுத்தற் கென்றே மெல்லமெல்ல ஒவ்வொரு சொல்லாகச் சில சில வடசொற்களைத் தமிழிற் புகுத்தி, சில சார்பிலக்கண நூலும் இயற்றி, அவற்றில் வடசொல் லும் தமிழ்ச் செ-யு ளுறுப்பாகு மென்று கூறிவிட்டனர். அக்காலத்து அவர் நிலத்தேவர் என்றும் அவர் மொழி தேவமொழியென்றும் நம்பியதால், தமி ழர் வடசொற் கலப்பைத் தடுக்கும் ஆற்றல் இலராயினர்.

தொல்காப்பியத்திலேயே முதன்முதல் வடசொல் தமிழ்ச் செ-யு ளுறுப்பாகச் சொல்லப்பட்டதாகத் தெரிகின்றது. அக்காலத்துத்தமிழிற் கலந்த அயன் மொழிச்சொல் வடசொல் ஒன்றே. அதனால் அதை அம் மொழி யின் பெயராலேயே குறித்தனர்.

சொற்களையெல்லாம் மொழிநூன் முறையில் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என மூன்றாக மூன்றாக வகுத்தது போன்றே, இலக்கணமுறையில் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் என மூன்றாக முன்னரே வகுத்திருந்தனர். சொற்களின் வழக்காற்றை அறிதற்கும், இடம்நோக்கிச் சொற்பொரு ளுணர்தற்கும், சொல்லுறுப்புகளைப் பகுத்தற்கும் கணவறிவு இன்றியமையாததாதலின், மெ-ப்பொருளியற்கு ஏரணம்போல் மொழிநூற்கு இலக்கண மும் துணையான முன்னறி கருவிநூலாம்.

இலக்

இற்றைத் தமிழிலக்கண நூல்களுள் முதலதான தொல்காப்பியத் தி லுள்ள மொழிநூல் நூற்பாக்கள் வருமாறு:

66

'இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்

றனைத்தே செ-யுள் ஈட்டச் சொல்லே.'

وو

(880)

5