உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

சொல்லை இயற்சொல் (Primitive) என்றும், அதனின்றும் திரிந்த சொல் லைத் திரிசொல் (Derivative) என்றும், குறித்தனர்.

எ டு: இயற்சொல்

நல் வெள்

செல்

திரிசொல்

நலம், நன்கு, நன்றி, நல்கு

வெள்ளம், வெள்ளி, வெளிறு, வெள்ளை செலவு, செல்வம், சென்று, சென்றான்

முன்னொட்டும் ஈறும் பெறாது அகவுறுப்பு மட்டும் திரிந்த சொல்லை முதனிலைத் திரிசொல் (primary derivative) என்றும், முன்னொட் டேனும் ஈறேனும் இரண்டுமேனும் பெற்றுத் திரிந்த சொல்லை வழிநிலைத் திரிசொல் (secondary derivative) என்றும் கூறுவர் ஆங்கில இலக்கண

வாசிரியர்.

எ-டு:

இயற்சொல் முதனிலைத் திரிசொல் வழிநிலைத் திரிசொல்

வெல்

உண்

வென் (வெற்றி) ஊண்

செல்

மீச்செல், செலவு, மீச்செலவு

உரையாசிரியன்மார் பிற்காலத்தவ ராதலால், இயற்சொல் திரிசொல் என்பவற்றின் உண்மையான இயல்பைத் தெளிவா- உணராவிடினும், ஒரு மருங்கு அறிந்தே, “திரிதலாவது உறுப்புத் திரிதலும். முழுவதுந் திரிதலுமென இருவகைத்து. கிள்ளை மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன. விலங் கல் விண்டு என்பன முழுவதும் திரிந்தன” என்று கூறிப்போயினர். கிளி என்பது கிள்ளை யென்றும், மயில் என்பது மஞ்ஞையென்றும் திரிந்தது உறுப்புத் திரிதல் என்றும், மலை என்பது விலங்கல் என்றும் விண்டு என் றும் திரிந்தது முழுவதுந் திரிதல் என்றும் அவர் கொண்டனர். இவற்றுள் முன்னது சொற்றொடர்பு கொள்வதால் ஒருமருங்கே வழுவாம்: பின்னது பொருட்டொடர்பே கொள்வதால் முற்றும் வழுவாம்.

இனி, தமிழர் திரிசொற்களை முதனிலை, ஈறு, இடைநிலை, சாரியை, புணர்ச்சி, திரிபு என ஆறுறுப்புகளாகப் பகுத்து, சொல்லமைப்பு முற்றுங் கண்டுவிட்டனர். வேற்றுமையுருபும் ஈற்றுள் அடங்கும்.

திரிபு மூவகைப் புணர்ச்சித் திரிபும் அறுவகைச் செ-யுள் திரிபுமாக இருபாற்பட்டதென்று ஆ-ந்தறிந்தனர். செ-யுட்டிரிபுகள் செ-யுளாற் பெயர்