உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

3

இடைக்கழகக் காலத்திற்கும் கடைக்கழகக் காலத்திற்கும் இடைப் பட்டிருந்த தொல்காப்பியர் கூறிய பன்னிரு கொடுந்தமிழ் நிலங்களையும், நச்சினார்க்கினியர் போன்ற பிற்கால வுரையாசிரியர் அகக்கொடுந்தமிழ் நிலமும் புறக் கொடுந்தமிழ் நிலமும் என இருமடியாக்கி,

"இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும் பழந்தீவுங் கொல்லமுங் கூபமுங் கொங்கணமுந் துளுவுங் குடகமுங் கரு நடமுங் கூடமும் வடுகுந் தெலுங்குங் கலிங்கமுமாம்."

“சிங்களம் அந்தோ வென்பது; கருநடங் கரைய சிக்க குளிர என் பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டிலென்பது; துளு மாமரத் தைக் கொக்கென்பது; ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.

وو

என்று உரைப்பாராயினர். மொழிகள் திரிந்துகொண்டே யிருப்பதால், முற்காலக் கொடுந்தமிழ்களே பிற்காலத் திராவிட மொழிகள் என்றறிதல் வேண்டும். முதலிரு கழகக் காலத்தும் இருந்த கொடுந்தமிழ் நிலங்கள் இற் றைத் திரவிடமொழி நிலங்களே. திரவிட மொழிகள் ஆங்கிலமும் வடமொழி யும் போன்ற அயன்மொழிகளல்ல. ஆகவே, திசைச்சொல் என்பது அயன் மொழிச் சொல்லன்று.

அந்தோ என்பது தமிழினின்று சிங்களஞ் சென்று வழங்குஞ் சொல்லே யன்றி, சிங்களத்தினின்று தமிழுக்கு வந்ததன்று. வடமொழியிலும் இது வழங்கும்.

அத்தன் - அத்தோ -அந்தோ ஹந்த(சிங்., வ.)

அச்சன் – அச்சோ

அக்கை - அக்கோ - அகோ

அம்மை - அம்மோ

அன்னை - அன்னோ

ஐயன் - ஐயோ, ஐயவோ, ஐயகோ

பெற்றோரைக் குறிக்குஞ் சொற்கள் விளிவேற்றுமை வடிவில் இரக்க மும் வியப்பும் உணர்த்தும் இடைச்சொல்லாவதை, என் 'செ. ப. க. க. அ. சீர் கேடு' என்னும் சுவடியைக் கண்டு தெளிக.

செந்தமிழ்ச் சொல்லை இயற்சொல் திரிசொல் என இருவகைப் படுத்தி, வேரும் (root), அடியும் (stem), முதனிலையும் (theme) ஆன இயல்பான