உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

இலக்கணம், சொற்பிறப்பியல் (Etymology), அகரமுதலிக் கலை (Lexi- cography) என்பன மொழிநூற்கு உறுப்பியல்களும்; வரலாறு, மாந்தனூல் (Anthropology), உடல்நூல் (Physiology), உளநூல், (Psychology) என்பன அதற்குத் துணை நூல்களும் ஆகும்.

2. மொழிநூல் தோற்றம்

ஆரியர் வருமுன்பே, தமிழிலக்கண நூலார் தமிழைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என இரண்டாக வகுத்து பாண்டிநாட்டைத் தன்னுட் கொண் செந்தமிழ் நிலத்தில் வழங்கிய சொற்களைச் செந்தமிழ்ச்சொல் என்றும், செந்தமிழ் நிலத்தின் வடக்கும் வடகிழக்கும் வடமேற்குமாகப் பல்வேறு திசைகளிலுள்ள எல்லைப்புற நாடுகளாகிய கொடுந்தமிழ் நிலங்களில் வழங்கிய சொற்களைத் திசைச்சொல் என்றும் வழங்கினர். பல திசைகளில் வழங்கிய சொற்களாதலால் பொதுவாகத் திசைச்சொல் (Provincial words)

எனப்பட்டன.

திசைச்சொல் என்பன, செந்தமிழ் நிலத்து வழங்காது கொடுந்தமிழ் நிலங்களில் மட்டும் வழங்கிய திருந்திய சொற்களும் சொல் வழக்குகளுமே என்பதை,

"தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், குட்டநாட்டார் தாயைத் தள்ளையென்றும்........... அருவா நாட்டார் சிறு குளத்தைக் கேணி என்றும், அருவா வடதலையார் குறுணியைக் குட்டை யென்றும் வழங்குப்" என்று நச்சினார்க்கினியரும், அவரை யொட்டியே பிறரும், தம் காலத்திற்கேற்பத் திசைச்சொற்கு எடுத்துக் காட்டியதை நோக்கிக் கண்டு கொள்க.

இத் திசைச்சொற்கள், பெற்றோர் பிள்ளைகளினின்று கடன் கொள் வது போன்ற அகக்கடன் (Internal loan) என்று அறிக.

திசைச்சொல்லை வேற்றுமொழிச் சொல்லென்பார் மொழியாராச்சியும் சொல்லாரா-ச்சியும் இல்லாதாரே. அவர் அங்ஙன் மயங்கற்கேது நன் னூலார் கொடுந்தமிழ் நிலங்களைப் பதினெட்டாகக் கூறியதே.

கொடுந்தமிழ் நிலங்கள், தலைக்கழகக் காலத்திலிருந்தனவும் இடைக் கழகக் காலத்திலிருந்தனவும் கடைக்கழகக் காலத்திருந்தனவும் வெவ் வேறாம்.

"