உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

என்பதே தொல்காப்பிய நூற்பாவின் சரியான பாடமாயின், அந் நூற்பாவின் ஈற்றடியை,

66

அஐ ஔஎனும் மூன்றலங் கடையே” என மாற்றி, பல சகரமுதல் தென்சொற்களை வடசொல்லென்று வடசொல்லென்று காட்டற்கும் தமிழ் சொல்வளமற்ற மொழியென்று பழித்தற்கும், பன்னூற்றாண்டாகப் பயன்படுத்தி வந்திருக் கின்றனர் தமிழ்ப்பகைவர் என அறியலாம். அது உண்மையான பாடமன் றாயின், தொல் காப்பியர் வழுப்படக் கூறியுள்ளார் என்றே துணியலாம். இதை யறியாத உண்மைத் தமிழ்ப்பற்றாளர் சிலரும் அச்சிட்ட முதற்பதிப்பு களில் உள்ள பாடமே உண்மையான பாடமென்று கொண்டு, சகரமுதற் சொற்களெல்லாம் வடசொற் களென்றோ, தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டவை யென்றோ, மயங்கிக் கூறுவாராயினர்.

நன்னூற்கு முதன்முதல் உரைகண்ட மயிலைநாத ருரையில் மேற் கோளாகக் காட்டப்பெற்றுள்ள,

“சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி

சளிசகடு சட்டை சவளி

சவிசரடு

சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்

வந்தனவாற் சம்முதலும் வை

وو

என்னும் பழைய நூற்பா, சகரமும் தமிழில் மொழிமுதலெழுத்தாம் என்பதை ஐயந்திரிபற நாட்டுகின்றது.

தமிழுக்கு இன்றியமையாதனவான 150-ற்கு மேற்பட்ட சகரமுதற் சொற்கள் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும் வழங்கிவருவதால், அவற்றை வடசொல்லென்றோ பிற்காலத்தனவென்றோ கொள்வது மொழி நூற்கும் உண்மைக்கும் முற்றும் முரணாம்.

சக்கட்டை, சக்கந்து, சக்கந்தம், சக்கு, சக்கை, சகசக, சகடம், சகதி, சகோடம், சங்கங்குப்பி, சங்கு, சச்சரவு, சட்ட, சட்டகம், சட்டம், சட்டன், சட்டி, சட்டு, சட்டுவம், சட்டை, சடங்கம், சடங்கு, சடலம், சதரம், சடார், சடா-, சடை, சடைவு, சடைச்சி, சண்டு, சண்டை, சண்ணக்கடா, சண்ணம், சண்ணி, சண்ணு, சண்பு, சணம், சணா-, சணாவு, சத்தவி, சதக்கு, சதுப்பு, சதும்பை, சதை, சந்தனம், சந்தி, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பணம், சப் பரம், சப்பளி, சப்பன், சப்பாணி, சப்பாத்து, சப்பு, சப்பை, சம்பல், சம்பளம், சம்பளி, சம்பா, சம்பு, சம்பை, சம்மட்டி, சமட்டு, சமம், சமர், சமழ், சமன், சமயம், (சமைதல், சமையல், சமையம்), சர், சரக்கு, சரசர, சரட்டு, சரடு, சரப்பளி, சரம்,

சமை