உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

9

சரவட்டை, சரவடி, சாவை, சரள், சரி, சருகு, சரப்பளி, சரம், சரவட்டை, சரவடி, சரவை, சரள், சரி, சருகு, சருச்சரை, சரம், சர வட்டை, சரவடி, சரவை, சரள், சரி, சருகு, சருச்சரை, சருவம், சருவல், சருவு, சரேல், சல்லடம், சல்லடை, சல்லரி, சல்ல வட்டம், சல்லாரி, சல்லி, சல்சல்,சல்லு, சலக்கு, சலக்கம், சலகன், சலகு, சலகை, சலங்கு, சலங்கை, சலசல, சலம்பு, சலாகை, சலாம்பு, சலி, சலிகை, சலுக்கு, சவ்வு, சவக்கு, சவங்கு, சவட்டு, சவடி, சவடு, சவணி, சவம், சவர், சவர்க்களி, சவரி, சவலை, சவன், சவளம், சவளி, சவளை, சவளக்காரர், சவறு, சலி, சவுத்தல், சவுக்களி, சவை, சழக்கு, சழங்கு, சழி, சள், சள்ளிடு, சள்ளு, சள்ளுக்கா-, சள்ளுவாயன், சள்ளை, சளக்கு, சளசள, சளப்பு, சளம்பம், சளார், சளி, சற்று, சறாம்பு, சறுக்கு, சறை, சன்னம்

முதலிய சொற்களெல்லாம் ஆரியச் சொல்லென்றோ பிற்காலத்தவை யென்றோ கொள்வது அறிவுடைமைக்கு இழுக்காம்.

உலகில் முதன்முதல் நாகரிகமாகச் சமைத்துண்டவன் தமிழனாத லின் அவன் சட்டிவனையவும் சமையல் செ-யவும் தெரியாதவன் என்று கருத

வொண்ணுமோ?

சில சகரமுதற் சொற்கள் எத்தனையோ கூட்டுச் சொற்களைப் பிறப் பிக்கின்றன.

எ-டு : சட்டக் கட்டில், சட்டக்கதவு, சட்டக்கல்வி, சட்டக்கால், சட்ட கப்பை, சட்டங்கட்டுதல், சட்டங்கொழித்தல், சட்ட திட்டம், சட்டந்தட்டுதல், சட்டந் தைத்தல், சட்டப்பரம்பு, சட்டப் பலகை, சட்டநம்பி, சட்டம் வாருதல், சட்டமழித்தல், சட்ட மிடுதல், சட்டவட்டம், சட்டவிளக்கு.

பல சகரமுதற் சொற்களின் இனச்சொற்கள் திரவிட மொழிகளிலும் உள்ளன.

எ-டு: ம. சம்பா, க. சம்பெ, தெ. சம்பாவுலு.

ஆரியர் வந்தபின் தமிழரின் அகக்கரணவாற்றல் குன்றித் தமிழ் வளர்ச்சி தடையுண்டதினால் ஆங்கிலராட்சி தோன்றும்வரை புதுச்சொற் கள் பெரும் பாலும் தமிழில் தோன்றவில்லை.