உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

2. ஞால நடுமை

15

ஞாலநடுவிடம் நண்ணிலக்கோட்டை (equator) யடுத்த குமரிக்கண் டமேயன்றி, சமதட்பவெப்ப மண்டலத்தைச் சார்ந்ததும் நண்ணிலக்கடல் என்று தவறாகப் பெயர் பெற்றுள்ளதுமான இடத்தைச் சேர்ந்ததன்று.

ஆடையின்றி நீண்ட காலமாகக் குறிஞ்சிநிலத்தில்

வாழ்ந்திருந்த

இயற்கை மாந்தனின் உடல் முழுதும் போர்த்திருந்த மயிர் கழிவதற்கு, வெப்பநாடே ஏற்றது.

3. இயற்கை வளம்

இயற்கை விளையுளையே பெரும்பாலும் உண்டு வந்த முதற்கால மாந்த னுக்கேற்ற காயுங்கனியும் கிழங்கும் வித்தும் விலங்கும், பறவையும், மீனும், ஏராளமா-க் கிடைத்திருக்கக் கூடியது குமரிக்கண்டமே. ஆடும் மாடும், ஊனும் பாலுந் தோலும் ஒருங்கே உதவின.

4. உயிர்வாழ்விற்கு ஏற்பு

நான்காம் மண்டலக்காலத்தில் ஐரோப்பாவிற் படர்ந்த பனிக்கட்டிப் படலம் போன்ற இயற்கைப் பேரிடர்ப்பாடு, குமரிக்கண்டத்தில் நிகழ்ந்த தில்லை.

5. தமிழர் பழக்கவழக்கப் பழைமை

பண்பட்ட தென்னாட்டுப் பழங்குடி மக்களான தமிழரிடையிருந்து அருகிவரும் காது வளர்ப்பு, பச்சை குத்தல் முதலியன. முந்தியல் மாந்தர் பழக்கவழக்கங்களாகும்.

6. முந்தியல் மாந்தர் வாழ்நில அண்மை

விலங்காண்டியரும் அநாகரிகருமான முந்தியல் மாந்தர் வழியினர் வாழ் நிலங்களான ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும், குமரிக்கண்ட மிருந்த இடத்தைச் சூழ்ந்தே யிருக்கின்றன. அநாகரிக நிலைக்கு அடுத்ததே நாகரிகநிலை.

7. உலக முதல் உயர்தனிச் செம்மொழி வழங்கிய இடம்

உலக முதற்றா- மொழியாகிய தமிழ் வழங்கிய இடம் பழம் பாண்டி நாடான குமரிநாடே.