உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

றோரிணையினின்றே மக்களெல்லாம் தோன்றியிருத்தல் வேண் டும். இது வரலாறு தழுவிய முடிபேயன்றிச் சமயக் கொள்கையன்று.

மாந்தன் நிலைகள்

1. தேவ மாந்தன் (Homo Divinus)

2. இயற்கை மாந்தன் (Homo Naturalis)

3. அறிவுடை மாந்தன் (Homa Sapiens)

தேவ மாந்தன் என்னும் நிலையைக் கிறித்தவ இசலாம் மதங்களே கொள் கின்றன. சிவனிய (சைவ) மாலிய (வைணவ) சமண புத்த மதங்கள் கொள்வன ஏனை யிரண்டுமே. அவ் விரண்டையும் அவை தளையுயிர் என ஒன்றாகவே கொள்கின்றன.

தேவமாந்தன் உலகில் வாழ்ந்ததாகச் சொல்லப்படினும், நடையுடை மொழி முதலியவற்றில் உலகியல் மாந்தனின்றும் வேறுபட்டவனாதலால், அவன் செ-தி ஈண்டாரா-ச்சிக் குரியதன்று.

உலக முழுதும் பரவிய இயற்கை மாந்தர் முதற்கண் விலங்காண்டி (savage) நிலையிலேயே இருந்தனர். பின்னர் அவருட் பலர் அரை நாகரிக நிலையடைந்தனர். அதன் பின்னர் அறிவுடை மாந்தர் என்னும் நாகரிகமாந்தர் தோன்றினர். ஆதலால், உலக மாந்தர் இன்று இம் மூவகை நிலையிற் காணப் படுகின்றனர். ஆயினும், நாகரிக மாந்தர் தொடர்பினால் விலங்காண்டியர் மிகச் சிறுபான்மையராகி யுள்ளனர். விலங்காண்டிநிலைக் கும் அரை நாகரிகத்திற்கும் இடைப்பட்ட நிலையை அநாகரிகம் (Barbarism) எனலாம்.

முதன்முதல் தோன்றிய அறிவுடை மாந்தன் தமிழனே. பண்பாட் டியல் மாந்தனூலும் அவன் தோற்றத்தோடேயே தொடங்குகின்றது.

குமரிநாடே நாகரிக மாந்தன் பிறந்தகம்

சான்றுகள்

1. நிலத் தொன்மை

ஞாலத்தில் மிகமிகப் பழைமையான நிலப்பகுதியும், பறவை தோன்று முன்பே நீண்ட காலம் நிலைத்திருந்ததும், குமரிக்கண்டமே, எகிபதிய நாகரிகத்திற்கு முந்தியது குமரிநாகரிகம்.