உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

13

கடுத்த நிலையிலுள்ள விலங்கினம் என்று கொள்வதல்லது, குரங்கினின்று மாந்தன் தோன்றினான் என்று கொள்வது பொருந்தாது. இங்ஙனமே ஏனை யினங்கட்கும் வடிவொப்புமையன்றிப் பிறப்புத்தொடர்பு கொள்வதற்கிட மில்லை. காலந்தோறும் உயிரினங்கள் வேறுபட்டும் உள்ளன. பல்வேறு நிலப் படைகளிற் காணப்பெறும் எலும்புக் கூடுகளும் கல்லுடம்புகளும் (fossils) தாழ்ந்த இனங்களைக் கீழும் உயர்ந்த இனங்களை மேலுமாகக் காட்டுகின்றன வெனின், அது இறைவன் உயி ரினங்களை ஏறுவரிசையிற் படைத்தானென்று கொள்வதற்கன்றித் திரிபாக்கக் கொள்கைக்குச் சான்றாகாது.

மாந்தன் துமுக்கி (gun) போன்ற பொறியியல் படைக்கலங்களை ஆக்கிக்கொள்ளு முன்பும், அவன் தோன்று முன்பும், இருந்த கைம்மலை களும், பனையும் தென்னையும் போன்ற பாம்பு பல்லிகளும் எருமையளவான பெரு வாவல்களும், வலிமை மிக்கிருந்தும் வளர்ச்சியின்றியும் எஞ் சாதும் இறந்துபட்டன.

ஆகவே, ஏனை யினங்களைப் போன்றே மாந்தனையும் இறைவன் படைத்தானென்று கொள்வதே சாலப் பொருத்தமாம்.

மாந்தன் தோற்றம்பற்றியும், ஒருவயிற் பிறப்பு (monogeny), பல வயிற் பிறப்பு, (polygeny) என இருவேறு கொள்கை யுள.

வரலாற்றிற் பின்னுக்குச் செல்லச் மாந்தர் தொகை சிறுத்துப் போவ தாலும், இன்று மக்கட்டொகை மிக்குள்ள பல தீவுகளும் நிலப்பகுதிகளும் ஒரு காலத்தில் மாந்தன் குடியிருப்பின்றி யிருந்தமையாலும், தட்பவெப்ப நிலையினாலேயே மக்கள் நிறம் வேறுபட்டுத் தோன்றுவதனாலும், எந்நாட்டு ஆடவனும் எந்நாட்டுப் பெண்டோடும் கூடி வாழ்வதனாலும், எவரும் எந்நாட்டு மொழியையுங் கற்கவும் எந்நாட்டு நாகரிகத்தையும் மேற் கொள்ளவும் இயல்வதனாலும், பல நாட்டுப் பழக்கவழக்கங்கள் ஒத்திருப் பதாலும், பல மொழிகள் ஒன்றோடொன்று தொடர்புடைமையாலும், மொழி கள் திரிபாலுங் கலப்பாலுமே ஒன்று பலவா-ப் பெருகி வந்திருப்பதனாலும், மக்களுறவினின்று பிரிக்கப்பட்ட பிள்ளைகள் ஒரு மொழியும் பேசாமையாலும், பலநாட்டு அறிஞர் கருத்து ஒன்றுபடுவதாலும், மன்பதை முழுவதும் அநாகரிக நிலையிலிருந்தே நாகரிகத்தை யடைந்திருப்பதனாலும், ஒரே

பெற்