உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மாந்தன் தோற்ற வளர்ச்சிக் காலம்

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

1. மாந்தன் தோற்றம் - தோரா. கி.மு.100,000

2. தமிழன் (நாகரிக மாந்தன்) தோற்றம் - தோரா, கி.மு. 50,000

3. முழு நாகரிகத் தமிழன் தோற்றம் - தோரா. கி.மு. 10,000

மேலை நாடுகளுள் முதன்முதலாக நாகரிகமடைந்தது எகிபது. அதன் நாகரிகத் தோற்றம் கி.மு. 6000 என்று சொல்லப்படுகின்றது. அங்ஙன மாயின், எகிபதிய நாகரிகத்திற்கு முந்திய கும ரிநாட்டுத் தமிழ் நாகரிகத் தோற்றம் கி.மு.10,000என்று கூறுவதில், ஒருசிறிதும் உயர்வுநவிற்சியில்லை. பஃறுளி யாற்றங்கரைத் தென்மதுரைத் தலைக்கழகத் தோற்றக் காலமும் அதுவே.

மாந்தனூற் பிரிவுகள்

1. உடலியல் மாந்தனூல் (Physical Anthropology) 2. குமுகவியல் மாந்தனூல் (Social Anthropology)

3. பண்பாட்டியல் மாந்தனூல் (Cultural Anthropology)

மாந்தன் தோன்றிய வகை

உயிரினங்கள், அடிமட்டத்திலிருந்து உச்சிநிலை வரை, படிமுறை யா-த் தாழ்ந்த இனத்திலிருந்து உயர்ந்த னமாக ஒன்றினொன்று தோன்றி வளர்ந்தன வென்று, நிலநூலார் (Geologists), உயிர்நூலார் (Biologists), மாந்த னூலார் (Anthropologists) முதலிய அறிவியல் நூலாரால் நம்பப்படினும், கடவுள் நம்பிக்கையில் உறைத்துநிற்கும் பெரும்பான் மக்களால் ஒப்புக்கொள்ளப் பெறவில்லை.

இங்ஙனம், மாந்தன் தோற்றம்பற்றித் திரிபாக்கம் (Evolution), கடவுட் படைப்பு (Divine Creation) என இருவேறு கொள்கைகள் உள.

திரிபாக்கக் கொள்கையரும் திரிபாக்கம் இறைவனால் நிகழ்த்தப் பெற்றதென்று கொள்ளும் நம்புமதத்தாரும் (Theists), அது இயற்கையா நிகழ்ந்ததென்று கொள்ளும் நம்பாமதத்தாரும் (Athesits) என இரு சாரார்.

குரங்கு வகைகளுள் காட்டு மாந்தன் (orang - outang), குரக்கு மாந்தன் (pithecanthropos) முதலிய மாந்தற் போலிகள் (anthropoids) தோற்றத்தில் மாந்தனை ஓரளவு ஒத்திருப்பினும் தோல் மென்மை, மூளை வளர்ச்சி, பேச்சுத் திறன், நகையழுகை மெ-ப்பாடுகள் முதலிய மாந்தன் சிறப்பியல்புகளின்றி விலங்கு நிலையிலேயே இருத்தலால், குரக்கினம் உடலமைப்பில் மாந்தனுக்