உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

2.

3.

4.

5.

6.

17

ஒடுங்கியும் இலக்கிய மற்றும் இடையீடுபட்டும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியமுற்றும் செறிந்தும் இருத்தலும்.

நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட் கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தலும். தென்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நாற்பெருந் தென்னிந்திய மொழிகளுள் முழுத் து-மையுள்ள தமிழ், தென்னாட்டின் தென்கோடியில் வழங்குதல்.

தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச் செல்லத் தமிழ் திருந்தியும் சிறந்தும் இருத்தலும், நெல்லைவட்டாரப் பேச்சு சொல்வள மிக்குத் தொல்லை முறையில் ஒலித்தலும், “ திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்’ என்னும் வழக்கும், பாண்டிநாடும் பாண்டியனும் முறையே தமிழ்நாடு தமிழ்நாடன் என்று பெயர் பெற்றிருத்தலும்.

தமிழ், வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழி களிலுமுள்ள வல்லொலிகளின்றி, பெரும்பாலும் எளிய முப்பான் ஒலிகளே கொண்டிருத்தலும்; எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெ-யொலிகள்கொண்டமொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்த தீவுகளிலும் வழங்குதலும்.

தமிழிலக்கியம் முழு வளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட் ட தலைக்கழகம், 49 நாடுகளைக்கொண்டு ஈராயிரங்கல் தொலைவு தெற்கே நீண்டிருந்த குமரிக்கண்டத்தின் தென்கோடிப் பஃறுளியாற் றங்கரையில் மதுரை இருந்தமையும்; குமரிக்கண்டத்தின் உண்மை யைப்பற்றி இறையனாரகப்பொருளுரை மட்டுமன்றிப் புறநானூற்றுச் செ-யுளும் கலித்தொகைப் பாட்டும் சிலப்பதிகாரமும் அதன் அடியார்க்குநல்லாருரையும் குறித்துங் கூறியுமிருத்தலும்.

7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென் கிழக்குத் தீவுகட்குக்கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத்திசையையுங் குறித்தலும்.

8.

பண்டைத் தமிழ்ச் செ-யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும் உரையாசி ரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (black swan) ஆத்திரேலி யாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியாத்தீவில் இன்றுமிருத்தல்.