உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

9.

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்குகளும் நிலை த்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற்றெல்லாக் கருப்பொருள்களும் காலவகைகளும் நிலவகைகளும் நிலவகைகளும் தென்னாட் டிற்குச் சிறப்பாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

10. நாகரிகத்தொடக்க நிலைக்குரிய குறிஞ்சி மகளிர் தழையுடையும் தனியூராட்சியும், தமிழர் தமிழர் முழுநாகரிக மடைந்த பின்பும் அகப் பொருட் செ-யுள்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டு வருதல்.

11.

நண்ணிலக் கோட்டையடுத்த வெப்பநாட்டு மக்கட்குரிய நிறத்த ராகவே பண்டைத்தமிழர் குறிக்கப்பட்டிருத்தலும், பனிக்கட்டியைப் பற்றி ஒரு குறிப்புமின்மையும்.

12. தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டிலேயே தொ டர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின் மையும்,

13. தமிழர் பிறநாட்டினின்று வந்தவரென்று பண்டைத் தமிழிலக் கியத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்புமின்மை.

14. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவந் துள்ளமை.

15. பண்டைத் தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென்புலத்தார் என்றும், அவர் இருந்ததாகக் கருதிய இடத்தைத் தென்புலம் அல்லது தென் னுலகு என்றும், கூற்றுவனைத் தென்புலக்கோன், தென்றிசைக் கிழவன் தென்றிசை முதல்வன் என்றும், குறித்து வந்தமை.

16. தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமா-த் திரிகின்ற வன்,

17.

தென்வடல், தென்பல்லி வடபல்லி (அணிகள்) முதலிய

வழக்குகளில், தென்றிசையே முற்குறிக்கப்பெறுதல்.

எண்டிசைத் தலைவருள் வடபால் மூவர் தவிர ஏனையவரெல் லாரும் குமரிநாட்டிற்கே பொருத்தமாயிருத்தல்.

18. தென்மொழிச் சொற்களுட் பெரும்பாலன கொத்துக்கொத்தாகவும் குலங்குலமாகவுந் தொடர்புகொண்டு தமிழிலேயே வழங்கி வருதல்.

19. தென்மொழி வளர்ச்சியின் ஐந்நிலைகளையும் தமிழே காட்டி நிற்றல்.