உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

9.

21

களை வலிமெலியிடையாகவும் முறைப் படுத்தியதுமான தமிழ் நெடுங்கணக்கு, குமரிநாட்டிலேயே கி.மு.10ஆம் நூற்றாண்டிற்கு முன் தோன்றியமையும், தமிழெழுத்துகட் கெல்லாம் அறிவியல் முறைப்படி பிறப்பியல் கூறப்பட்டமையும்.

தமிழிலக்கணப் பாகுபாடுகளும் குறியீடுகளும் சிறந்த ஏரண முறையிலும் மெ-ப்பொருளியற் போங்கிலும் அமைந்திருத்தல்.

10. தமிழ் இலக்கண வகையீடும் நூற்பிரிவுகளின் முறைவைப்பும் வண்ணனையியல்பும் பெரும்பாலும் இயற்கையையும் உண்மை யையும் ஒட்டியிருத்தல்.

11. தமிழ் அறநூல்களெல்லாம் வகுப்பு வேற்றுமையின்றி நடுநிலைமை ս யாகவும் அன்பாகவும் அறவொழுக்கங்களையும் தண்டனை களையும் வகுத்திருத்தல்.

12. தமிழொடு இசை நாடகக் கலைகளையுஞ் சேர்த்து இயல் இசை நாடகம் எனத் தமிழை முத்தமிழாக வழங்கியமை.

13. மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அறம்பொரு ளின்பம் வீடென நான்காக வகுத்து, இம்மையிலும் மறுமையிலும் வீடுபேறடைதற் கேற்ற முழு முதற் கடவுளின் உருவமில்லா வழிபாட்டை முதன் முதற் கற்பித்தமை.

14. தமிழைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என்றும், செந்தமிழ்ச் சொற்களை இயற்சொல் திரிசொல்லென்றும், பகுத்து மொழிநூற் கூற்றையும்

சொல்லிலக்கணத்தொடு சேர்த்தமை.

15. தமிழ் என்றுங் கெடாதிருக்குமாறு செந்தமிழையே நிலையான அளவையாக வரம்பிட்டமை.

16. செந்தமிழைக் காக்குமாறும் புது நூல்களிற் செந்தமிழையே கடைப் பிடிக்குமாறும் பாண்டியரால் முக்கழகங்கள் நிறுவப் பெற்றமை.

எபிரேயம் (Hebrew) உலக முதன்மொழி யன்மை

சான்றுகள்

1. எபிரேய மொழித்தோற்றம் கி.மு. 17ஆம் நூற்றாண்டது. எபிரேயம் என்பது இசரவேலர் அல்லது யூதர் எனப்படும் இனத்தார் மொழி.