உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வண்ணனை மொழிநூலின் வழுவியல் இசரவேல் என்னும் யாக்கோபின் காலம் கி.மு. (1837-1689). அவன் மக்களுள் ஒருவன் யூதா. இசரவேல் வழியினர் இசரவேலர். யூதா வழியினர் யூதர்.

இசரவேலும் அவன் மக்களும் எகிபதிற்குச் சென்ற ஆண்டு கி.மு. 1700. அவர்கள் அங்குக் குடியமர்ந்த பின்னரே எபிரேயம் உருப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. எபிரேயம் ஒரு வல்லொலி மொழி.

3. எபிரேயம் தமிழ்போல் ஒரு தா-மொழி யன்று.

4. எபிரேயச் சொற்கள் பிற மொழிகளில் தமிழ்போற் கலக்க வில்லை.

5.

நோவாகாலத்திற்குமுன் மேலையாசியா முழுதும் சேமிய மூல மொழியே வழங்கிற்று.

நோவா காலம் கி.மு.25ஆம் நூற்றாண்டு. “உலக முழுதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமா யிருந்தது”. (திருமறை (Bible), முதற் பொத்தகம் 11 : 1)

6. எபிரேயம் வழங்கிய நாடு குமரிக்கண்டம்போல் முது பழந்தொன் னாடன்று.

7. இசரவேலர் நீண்டகாலமாக நாடோடிகளாகவே யிருந்தனர்.

8. இசரவேலர் இறுதியாக வந்து குடியூன்றிய கானான் நாடும் குமரிநாடு போல் பெருவள முற்றதன்று.

9. கானான் நாட்டு நிலப்பரப்பு முதற்காலத்தில் கடலாயிருந்தாகத் தெரிகின்றது.

10. இசரவேலரின் முன்னோனான ஆபிரகாம் காலத்திற்கு முன்பே பல நாடுகளும் பல இனங்களும் பல மொழிகளும் தோன்றி விட்டன. அவன் பெயரின் முதற் சொல்லான ஆப் என்பது அப்பன் என்னும் தென்சொற் சிதைவே.

ஆபிரகாமின் காலம் கி.மு. 20ஆம் நூற்றாண்டு. அவன் காலத்து நாடுகள், பாபிலோனியம், அசீரியம், கானான், பிலித்தியம்,

பாரசீகம், எகிபது முதலியன.