உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

பேராசிரியராயிருந்தவரும்,

33

அண்ணாமலை ல

பல்லறிவியல்

பட்டம் பெற்றவரும், சென்னைச் சட்டக்கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் கற்றோரும், பன்னூலாசிரியரும், அரிய ஆரா-ச்சியாளரும், மாண்புமிக்க மதிவிளக்கம் பெற்றவரும், இறைவனருளால் ஆரிய அடிமைத்தனத்தி னின்று நீங்கித் தமிழ் மீட்புத் தொண்டை ஏற்றவரும் ஆகிய தாகூர் சட்ட விரிவுரையாளர் கா. சுப்பிரமணியப் பிள்ளையார் அவர்கள், தமிழர் விடு தலையும் முன்னேற்றமுங் கருதிச் ‘செந்தமிழ்ச் செல்வி'யில் வெளியிட்ட 'திருநான் மறை விளக்கம்' என்னும் சிறந்த கட்டுரையை, தம் தமிழறியாமை யாலும் ஆரியப்பற்றினாலும் சற்றும் தகாத முறையில் உண்மைக்கு மாறா கப் போலித்தனமாகக் கண்டித்து, கண்டித்து, ஆரா-ச்சியில்லாத் தமிழரை ஆரியப் படுகுழியினின்று எழவொண்ணாமற் செ-தவர் திரிசிரபுரம் திரு. மா. சாம்ப சிவப் பிள்ளையாராவர்.

8. சேதுப்பிள்ளையார்

தமிழ்ப்பகைவரான பிராமணத் தமிழ்ப் பண்டிதர் திரு. வையாபுரிப் பிள்ளையைத் துணைக்கொண்டு, தமிழ் ஆரியக் கிளைமொழியென்னும் முடிபுறத் தொகுத்த, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியின் ஐம்பாற்பட்ட நான்கு வகைக் குற்றங் குறைகளை எடுத்துக்காட்டுடன் ஆங் கிலத்தில் விளக்கியெழுதி, ‘A Critical Survey of the Madras University Tamil Lexicon' என்னும் பெயராற் சுவடி வடிவில் வெளியிட்டு, 17-6-1955 அன்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிற்கு அனுப் பியதைப் பொருட்படுத்தாதபடி செ-தவரும்; வங்கப் பிராமணரும், தமிழை நேரடியாக கல்லாத பிராமணத் தமிழ்ப் புலவரும், தமிழ் வரலாற்றை அறியாத அனவரத விநாயகம் பிள்ளையும் ஆங்கிலத்தில் எழுதியவற்றின் வாயிலாகக் கற்றவரும், சமற்கிருத வெறியரும், ஆகிய பர். சு. கு.

சட்டர்சியாரைத் தலைவராகவும் மொழி நூற் புலமையில்லாப் பலரை உறுப்பினராகவுங் கொண்ட ஒரு குழுவை, என் பணியை மேற் பார்க்கவும் வழிகாட்டி நடத்தவும் ஏற்படுத்தி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி (An Etymologi- cal Dictionary of the Tamil Language) தொகுக்காதவாறு தடுத்துத் தமிழைக் கெடுத்தவரும்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவரும் அண்ணாமலை பல்கலைக்கழக அமர்த்தக் குழு வுறுப்பினரு மாயிருந்த பேரா. ரா.பி. சேதுப்பிள்ளையாராவர்.

பர்.சு.கு. சட்டர்சியாரின் முகவரியைத் தமிழறிஞர் யாருங் கேட்பின், அதில் அவர் பெயரை 'நன்னெறி முருகன்' என்று தமிழில் எழுதித் தருவது