உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வழக்கம். சுநீதி என்பது தமிழில் நன்னயம் (நன்னயன்) என்றே அமையும். நன்னெறி என்பது சன்மார்க்கம் என்பதன் மொழி பெயர்ப்பாகும். குமரன் என்பது தமிழ்ச்சொல்லே. குமார என்னும் அதன் திரிந்த வடிவமே வடசொல் ஆதலால், நன்னயக் குமரன் என்றே எழுதலாம்.

'நன்னெறி முருகன்' என்று பர். சு. கு. சட்டர்சி எழுதித் தருவதை வைத்துக் கொண்டே, அவரை மாபெருந் தமிழ்ப் பற்றாளராகக் காட்டி வானளாவப் புகழ்ந்து பேசிவிட்டார் பேரா. ரா.பி. சேதுப்பிள்ளையார்.

பர். சு. கு. சட்டர்சியின் உண்மையான நிலையைப் பின்வரும் கூற்று களால் உணர்ந்துகொள்க.

பர். சு. கு. சட்டர்சியாரின் தமிழறிவுங் கொள்கையும் 1. நந்த மௌரியர் காலம் (1952)

ம்

திரவிடமொழிக் குடும்பம் இன்று இந்தியாவிற்குள் அடங்கியுள்ளது; ஆயின் முற்காலத் திரவிடமொழியார் நண்ணிலக் கடற்கரைவாணரா யிருந் தாரெனின், திரவிடம், இந்தைரோப்பிய எல்லெனியர் கிரேக்க நாட்டிற்கு வருமுன், அந் நாட்டிலும் அதையடுத்த தீவுகளிலும் சின்ன ஆசியா விலும் வாழ்ந்திருந்த பண்டை ஈசியக் (Aegean) கடற்கரை மாந்தரும் சின்ன ஆசியா மக்களுமானவரின் மொழியொடு, பொதுவாயிருந்த மொழிக் குடும்பத்திற்குத் தள்ளப்பெற வேண்டும். இம் மக்களின் ஒரு குக்குல வகுப்பார் பெயர் த்ர் (அ)மில் (Dra(a)mil) அல்லது த்ர்(அ)மிழ் (Dr(a)miz) என்றிருந்ததென்று ஒரு கருத்தமைத்திருக்கின்றேன். இப் பெயர் கிரேத்தாத் தீவில் அவ் வகுப்பின் ஒரு கிளையில் எல்லெனிய எழுத்துக் கூட்டில் தெர்மிலை (Termilai) என்றும், தென் சின்ன ஆசியாவிலுள்ள (இ)லிசியாவில் அதன் இன்னொரு கிளையில் த்ர்ம்மிலி (Trmmili) என்றும் காணப்படுகின்றது. நண்ணிலக் கடற்கரையினின்று இந்தியாவிற்குக் குடிவந்த இம் மக்கள், வெவ்வேறு பெயர்கொண்ட வெவ்வேறு குக்குலங் களாயிருந்து இயற்கையாகக் கூடிய கூட்டமாவர். அக் குக்குலங்களுள் ஒன்று சான்றின்படி த்ரமிழ் (Dramiz) என்பதாகும். இப் பெயர் த்ரமிட (Dramia) அல்லது த்ரமிள (Dramia) என்றும், பின்பு உண்மையில் கிறித்தவ}வழக்கு முன்பே த்ரவட (Dravida) என்றும், ஆரியப்படுத்தப்பட்டது. கிறித்துவின் காலத்தையொட்டி, இப் பெயர் இதனைத் தாங்கும் மக்களின் வாயில் தமிஸ் (Damiz) என்றானது. இக்காலத்தில் அவர்கள் இந்தியாவின் தென்கோடியில் முற்றும் குடியமர்ந்து தங்கள்

6

ப்