உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

35

பண்பாட்டை வளர்த்துத் தங்கள் நாடுகளையும் அமைத்துக்கொண்டார் கள். குச்சரத்தினின்றும் சிந்துவினின்றும் இலங்கைக்குக் குடியேறிய பண்டைச் சிங்களவரான ஆரிய மொழியார் இப் பெயரைக் கேட்டு, அதைப் பாளியிலும் சிங்களத்திலும் தமிள (Damia) என்று எழுதினார்கள். கிரேக்க எகிபதிய வணிகரும் இங் ஙனமே அப் பெயரைத் தமிர் (Damir) என்று செவியுற்று, தெளிவிளக்கமாகத் தமிழகம் என்று தன்னாட்டு வழக்கில் வழங்கிய நாட்டுப் பெயரைத் தமிரிக்கே (Damirike) என்று கிரேக்கத்திற் குறித்தனர். அதன்பின் சில பெரும் பரவலான ஒலித் திரிபுகள் த்ரமிழ்-தமிழ் (Dramiz-Damiz) மக்களின் மொழியை (கருதக்கூடியபடி கன்னடிகரின் மொழியைக்கூட) டுற்றுச் சென்றன. அவற்றுள் ஒன்று முழங்கொலி மெ-கள் (g j d d b), முழங்கா வொலி மெ-களாகத் (k c t t p) திரிந்ததாகும். கிறித்துவிற்குப்பின் சில நூற்றாண்டுகளுள், அம் மொழி கழக (சங்க) நூல்கள் என்னும் இன்றுள்ள முதுபழ நூல்களிற் காணும் நிலையை அடைந்தது. அதன் பெயரும் தமிழ் (Tamilz or Tamil) என்றானது. அவ் வடிவே இன்றுந் தமிழ்மொழியில் வழங்கிவருகின்றது. பக். 321-2

இதன் மறுப்பு

அறிவியல்

தனிப்பட்ட இரு ரு சொற்களின் ஒலியொப்புமையைச் சான்றாகக் கொண்டு ஈரினத்தார்க்கு உறவு காட்டுவது, முறைப்பட்ட ஆரா-ச்சியாகாது. அது தமிழ்ப் பேகனுக்கும் ஆங்கிலப் பேக்கனுக்கும் உறவு காட்டுவது போன்றதே.

மேலும், தமிழர் அல்லது திரவிடர் வடமேற்காகச் சென்று மேலை யாசியா வழியாக ஐரோப்பாவிற் குடியேறியதாகத் தெரிவதால், த்ர்மில் அல்லது த்ர்ம்மிலி என்று பெயர் பெற்றுக் கிரேத்தாத்தீவிலும் சின்ன ஆசி யாவிலும் குடியிருந்த மக்கள் வகுப்பார் அங்குக் குடிபோன தமிழர் அல்லது அவர் வழியினராகவே யிருந்திருக்கலாம். பேரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய ‘தமிழர் தோற்றமும் பரவலும்' என்னும் ஆங்கில நூலைக் காண்க.

சிறுபிள்ளைகள் பேச்சில் மெல்லொலிகளும் பெரியோர் பேச்சில் அவற் றோடு வல்லொலிகளும் தோன்றுவதுபோல், முந்தியல் மாந்தரான தமிழர் மொழியில் முழங்காவொலிகளும், அவருக்குப் பிந்தின திரவிடர் மொழிகளிலும் ஆரியர் மொழிகளிலும் அவற்றொடு முழங்கொலிகளும், தோன்றியிருப்பது இயற்கையே. ஆயின், முழங்காவொலி முழங் கொலியாக மாறுமேயன்றி முழங்கொலி முழங்காவொலியாக மாறாது.