உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

ஆதலால், தமிழர் கிரேக்க நாட்டினின்று அல்லது நண்ணிலக் கடற்கரை யினின்று இங்கு வந்திருக்க முடியாது.

க்

தென்மொழி இந்தியாவிற்குள்ளேயே முடங்கிக் கிடத்தலையும் தெற் கில் வரவரச் சிறத்தலையும், தமிழ் மெல்லொலி மொழியாகவும் பெருவள மொழியாகவு மிருத்தலையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட் கெல்லாம் வேரும் வேர்ப்பொருளும் தமிழே தாங்கி நிற்றலையும், நடு நிலையாக நோக்குவார் தமிழர் வெளிநாட்டினின்று வந்தேறிகள் என்னும் கொள்கையைக் கனவிலுங் கொள்ளார். இக் கொள்கையரெல்லாரும் தமிழின் சொல்வளத்தையும், கொத்துக்கொத்தாகவும் குடும்பங் குடும்ப மாகவும் குலங்குலமாகவும் தொடர்புகொண்டுள்ள சொல்லொழுங்கையும் ஒருசிறிதும் ஆந்தறியாதவரே யாவர். மேலும், பிற்கால வொலிகளாகிய முழங்கொலிகளை முற்கால வொலிகளாகிய முழங்காவொலிகட்கு மூல மாகக் காட்டுவது, கறந்த பாலைக் காம்பிற் கேற்றுவதும் வெடித்த பஞ்சை விரிந்த தோட்டிற்குட் புகுத்துவதுமே.

தமிழர் கிரேக்க நாட்டினின்று வந்தவராயின், தமிழ் அங்கேயே தூமையாகவும் இங்குத் திரிந்தும் வழங்குதல் வேண்டும். கிரேக்க மொழியிலுள்ள தொடர்பற்ற சில தென்சொற்களையே சான்றாகக் காட்டுவார், ஒரு மரத்தினின்று பறியுண்டு வேறிடத்திற் கிடக்கும் இலைகளினின்றே அம் மரம் வந்ததாகக் கூறுவாரை யொப்பர்.

2. அண்ணாமலை பல்கலைக்கழகத் திரவிட மொழிநூல் துறைத் தொடக்க விழாத் தலைமையுரை (1957)

"உண்மையில், நான் சங்க இலக்கியம் என்னும் தொன்முது பழந்தமி ழிலக்கியத்தின் போலிகைகளை (ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகப்) படித்தபோது, சமற்கிருதத்திற்கும் வெளிப்படையாக அதனைச் சார்ந்த பிற இலக்கியத்திற்குமில்லாத, அதன் புதுமையைக் கண்டு மிக வியப் படைந்தேன். தொன்முது பழங்காலத் தமிழ்க் குமுகாயச் சூழ்வெளியே, இராமாயணம் மகாபாரதம் முதலியவற்றிலும் புராணங்களிலும் செந்திறச் சமற்கிருத இலக்கியத்திலும், தென்னிந்தியத் திரவிட மொழிகளிலும் வட இந்திய ஆரியமொழிகளிலுமுள்ள இடைக்கால இலக்கியங்களிலும், காட்டப் பெறும் சூழ்வெளியோடு சிலவகையில் வேறுபட்டதாகத் தோன்றிற்று. தமிழிலக்கியத்திற் சொல்லப்பெறும் வாழ்க்கைத் தொடக்கமுறையும் அதன் மறவியற் சூழ்வெளியும் இந்திய இலக்கிய மண்டலத்துள் ஒரு தனிச்