உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

37

சிறப்பாகத் தோன்றின. காதலைக் களவு, கற்பு என்று இரு பரந்த வகையாக அல்லது கைகோளாக வகுத்த பழந்தமிழ் வகை யீடு, ஆரியம் என்று சொல்லப்படும் சமற்கிருத இலக்கியத்தின் கண்டிப்பான மரபுக் கொள்கைக்கு மாறாகப் போனதாக எனக்குத் தோன்றிற்று. (களவு என்பது பருவமடைந்த இள மக்களிடைப்பட்ட தாராளக் காதல். இது முன்னேற்ற மடைந்த குமு காயத்திற்போல்

வளரிளந்தையர் (adolescents) அல்லது இளந்தலை யரான இருபாலாரிடைப்பட்ட உறவு உயர்ந்த மரபுநிலைப்படாத முந்தியல் குமுகாயத்தில், மாபேரியற்கையாகக் காணப்படுவதாகும். கற்பு என்பது சட்ட முறைப்பட்ட திருமணத்தின்பின் ஏற்படும் ஒழுங்கான நெறிப்பட்ட காதல். இது இருபாலிடைப்பட்ட உறவுகளுட் சிறந்ததாகக் கொள்ளப்பெறும்.) இனி, தொல்காப்பிய அகப்பொருட்டுறைகட்கு அடிப்படையான முந்துகாலத் தமிழ்ப் புலவரின் விரிவான காதல் வரைவு, முற்றும் புதிதான தொன்றாகவும் அனைத்திந்தியச் சமற்கிருத இலக்கிய மரபைத் தழுவாததாகவும் எனக்குத் தோன்றிற்று. இங்ஙனம் குறிஞ்சி, முல்லை, நெ-தல், மருதம், பாலை என்னும் ஐந்திணை நிலைகளிடைப்பட்ட விரிவான உறவும், அவற் றொடு கூடிய வேறுபட்ட வாழ்க்கைக் கூறுகளும், பொருளியலும் பண்பாடும் பற்றிய பிற்படை நிலைமையும், காதலுணர் வொழுக்கங்களும், உண்மையில் உள்ளபடியே, பழந்தமிழிலக்கியத்தின் தனிப் புதுமையாக எனக்குத் தோன்றின. இவை யெல்லாவற்றின் கலைத் திறனும் புதுமையும் எனக்கு மிகுந்த ஆர்வவூக்கத்தை யுண்டுபண்ணின, இவ்வகையில் 2000 அல்லது 1500 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தை ஏனை யிந்திய நாடுகளினின்றும் சிறப்பித்துக் காட்டுகின்ற நிலைமை யுள்ளதென்னும் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்னும் ஆசை எனக்குட் பிறந்தது. பழந்தமிழ் மீது ஆர்வங்கொண்டு சிலராலும், அதிலுள்ள சமற்கிருதச்சொற்கள் மிக மிகக் குறைவென்றும், அங்ஙனமே கருத்துகளென்று

சமற்கிருதக்

சொல்லப்படுவனவும் அதில் மிகச் சிலவேயென்றும், திட்டவட்டமாகக் கூறப்பட்டன. இவ் வீருண்மைகளும் (சங்க நூல்களிற்போல்) தமிழிலக்கிய ய வழக்கு முற்றுஞ் சமற்கிருதச் சார்பற்ற தென்று நாட்டுவனபோற் காணப் பட்டன. இது மெ-யாகவே தமிழிலக்கியக் கலை நாகரிகங்களின் மூலவியன் மையும் ஒப்புநோக்கியல் தொன்மையும்பற்றிய நெறியுரிமையான பெருமை யுணர்ச்சியை யூட்டுதற்கு, எளிதாயுணரக்கூடியபடி, ஒரு திட்டமான மூல மாயிற்று. அதனால், தனி வேற்றுணர்ச்சிக்குப் பெரிதும் தூண்டுகோலாயிற்று. இவ் வுணர்ச்சி இன்று குமுகவியலும் அரசியலும் மதவியலும்பற்றிய வேறு சில தூண்டல்களாலும் வளர்க்கப்பட்டுள்ளது. இங்ஙனமே ஓர் அயலான் கருத்திற்குப் படுகின்றது.