உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

66

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பட

"பழந்தமிழ்ச் சிறப்பு மேற்கூறியவா றிருப்பினும், ஏறத்தாழ உடனேயே, சங்க நூல்களை முன்னினும் ஆழ்ந்து கற்றபோது, நான் சற்றும் அயற் சூழலிலில்லையென்று கண்டேன். (ஆனால் நான் கற்றது ஆங்கிலவாயி லாகத்தான்) இன்புறுத்துவனவும் திட்டமானவுமான சில முதலியன்மைக் கூறுகளிருப் பினும், தமிழிலக்கியத்தின் தொன்முது பண்டைச் சூழ்வெளி, உயிர்நாடியான அல்லது அடிப்படையான செ-திகளில், மகாபாரதம் இரா மாயணம் புராணங்கள் ஆகியவற்றின் சூழ்வெளியாகவே பெரும்பாலும் இருந்தது. மாபெரும்பாலான இந்திய மொழிகளில், தூய தற்சமமான அல்லது திரிபடையாத சமற்கிருதச் சொற்கள் ஏராளமா-க் காணப்படுவதை நோக்கும்போது, தமிழ்நடை (மூலத்தை எங்கெங்கு நோக்கினும்), மெ யாகவே வேறுபட்டுத் தோன்றிற்று. ஆனால் (நெடுநாளைக்குப் பின்னர்த் தான்), சமற்கிருதச் சொற்களும் பிற ஆரியச் சொற்களும் தமிழிற் புகும் போது அடையும் மாற்றத்தைப்பற்றி அனவரத விநாயகம்பிள்ளை திறம் எழுதியுள்ள நூலைப் பார்த்தபின்பு, அயல்போலும் விளங்காமலு மிருந்த சொற்களுட் பல தெளிவானவும் தெரிந்தனவுமாக மாறின. சொல்லப் போனால், பழைய முகங்கள் புதியவற்றிற்குப்பின் நின்று காட்சியளிக்கத் தொடங்கின. சபா என்னும் சமற்கிருதச்சொல் பழந்தமிழில் அவை என்று திரிந்துள்ளதைக் கண்டுகொண்டது, எனக்கு எனக்கு ஒரு சிலிப்புணர்ச்சியை யுண்டுபண்ணிற்று. இங்ஙனமே, ஸந்தி, ஸஹஸ்ர, அஜ, பூர்வாஷாட, ச்ரா வண, காவ்ய, தர்ம, கோபால, கன்யகா, ஸ்தூணா, ஸ்த்ரீ, துலஸீ, லோக, ப்ராஹ்மண, த்ரோணி, ஸ்நேக, தேச முதலிய நூற்றுக்கணக்கான சமற் கிருதச் சொற்களும், பெயர்களும் அதையொக்க உருமாறி, அவ்வுருமாற்றத்தில் அந்தி, ஆயிரம், அயன், பூராடம், ஆவணி, காப்பியம், தருமம், கோவலன், கண்ணகி, தூணம், தி, துழா-, உலகு, பார்ப்பான், தோணி, நேயம், தேயம் முதலியவையாகக் கரந்துள்ளன. "யோ-தேவ-நாமாந் யகிலாநி தத்தே." கடவுளின் எல்லா வெவ்வேறு பெயர்களாலும் மக்களிடைக் காணலாம் வெவ்வேறு தெ-வங்களாலும் அறியப்படுவது பரம்பொருளே. ஆதலால் தென்னிந்தியாவில் விட்டுணுவை மால் அல்லது மாயோன் என்னும் பெயரி லும், குமாரனை மருகன் அல்லது சேயோன் என்னும் பெயரிலும், துர்க்கை யைக் கொற்றவை என்னும் பெயரிலும், கண்டபோது மகிழ்ச்சியடைந்தேன். கருத்துலகும் மதக்காட்சியுலகும் முற்றும் சமற்கிருதத்திலுள்ளனவே. இவை, சமற்கிருத இலக்கணம் போன்ற பிராமண அறிவியலும்; எக்கிய வோமங்களென்னும் வேள்விக்குரிய தீயுடனும் பூசை வழிபாட்டிற்குரிய மலர்களுடனுங் கூடி, வேதங்களை அடிப்படையாகக் கொண்ட மகாபாரத்

ராமாயண

புராணங்களிற் சொல்லப்பட்டுள்ள பிராமண இந்துமதமும்; பண்டைத் தமிழக