உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

மக்களால் ஒப்புக்கொள்ளப் பட்டு, ஒருகால் வட

39

இந்தியாவிற்போல்

அவர்களது ஒத்தாசையாற் புது வளர்ச்சியடைந்த நால்வகை வரணமும் நால்வகை வாழ்க்கை நிலையும் ஆகிய பிராமணக் கொள்கைகளும் ஆகும். இவற்றொடு சமண புத்தமதக் கருத்துத் தொகுதி களும் உள்ளன. கருமம், உலகவாழ்க்கை (ஸம்ஸார) என்னும் பொது வழக்கான மெ-ப்பொருளியற் கருத்துகளும், (திருவள்ளுவரின் உடன் பிறந்தையாரான ஒளவையாரால் அறம்பொருளின்ப வீடு பற்றிய அவரது பெயர்போன பாவில் சொற் செறிவாகவும் அழகாகவும் இயல்வரை யறுக்கப்பெற்றுள்ள) தருமம், அருத்தம், காமம், மோட்சம் என்னும் உறுதிப் பொருள்களும், வேறு பல அனைத்திந்தியக் கருத்துகளும் அங்குள்ளன. இந்தியாவின் மாபெருங் கற்பிப்பு நூலாகிய திருக்குறள் தருமம் அருத்தம் காமம் ஆகிய திரி வருக்கம் என்னும் முப்பாலை மட்டும் எடுத்துக்கூறியது பொருத்தமே என எனக்குப் பட்டது. அதன் ஆசிரியரான அறிவர் காணப் படாத உண்மையைப்பற்றி அவரவர் கொண்டவாறு கொள்ளும்படி உத்தியாகத் தனிப்பட்டவர்க்கு விட்டுவிட்டு, சதுர்வருக்கம் என்னும் நாற்பாலின் இறுதிப் பாலாகிய வீட்டைப்பற்றிக் கூறாதே போயினர். ஒருவன் தன் பாட்டிக்கு நூல்நூற்கக் கற்றுக்கொடுப்பது உண்மையில் அடாச்செயலே. கொல்லத் தெருவில் ஊசிவிற்கத் தேவையில்லை. நெடு நாட்கு முன்பே 6 எனக்குத் தோன்றியது என்னவென்றால், பழந்தமிழ், அதன் மாபேரின்பக் கூறுகளிற் சிலவற்றைக் காட்டும் வெளிப்படையானவும் விளங்கித் தோன்றுவனவு மான பல குறிப்புகளைக் கொண்டிருந்தும், சமற்கிருதத்தினின்றும் வேறு இந்திய இலக்கியத்தினின்றும் அதைப் பிரிக்கமுடியாதென்பதும், இந்து என்னும் சொல்லை அதன் முழு விரிவான பொருளில் எடுத்துக் கொண் டால். அனைத்திந்திய இந்து இலக்கியத்திற் அது மிகப்பெரிதும் உட்பட்டது என்பதுமே. தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமைதரும் நாயன்மார் என்னும் சிவநெறித்தூயரும் ஆழ்வார் என்னும் திருமாலடியாரும் இயற்றிய பாடல்களைப் பொறுத்தமட்டில், இது மிக உண்மையானதாகும். இப் பாடல்கள், அவற்றின் ஆழமுடைமையாலும் அழ காலும் தெ-வத் தன்மையாலும் மக்கட் பண்புரைப்பாலும், இந்துக்களை மட்டுமன்றி மாந்தரினத்தையே ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உயரார்வத்திலும் வளம்படுத்தியுள்ளன. பக்.

8-12

6

"நாம் கொண்டிருக்கும் இந்து நாகரிகம் என்னும் இந்திய நாகரிகம், எண்ணுக்கெட்டாக் காலத்திலிருந்து இந்தியாவிற்கு வந்து தங்கிப் பக்கம் பக்கமாக வாழ்ந்துவந்த பல்வேறு மொழிபேசும் பல்வேறு வரண இனத்தாரின்