உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வடவர் சந்தி என்னும் சொற்கு ஸம் + தா என்று மூலங்காட்டுவர். அந்தி என்னும் வடிவு வடமொழியில் இல்லை.

அமைதல் = நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், கெட்டியாதல். அமை= கல்மூங்கில்.

அமை அவை = கூட்டம், களம் .ஒ.நோ. அம்மை - அவ்வை. செம்மை - செவ்வை. குமி - குவி, குமை

குவை.

அவை சவை. ஒ.நோ : அந்தி – சந்தி, அமை சமை.

சவை ஸபா (வ.) வடமொழியில் இதற்கு மூலம் இல்லை.

அயிர் = நுண்மணல். அயிர் அயிரம் ஆயிரம்= மணல்தொகை போன்ற பெருந்தொகை யெண்.

ஆயிரம்

ஹசார் (பெ, இ.,)

ஸஹஸ்ர (வ.)

+

ஹஸ்ர.

வடமொழியில் இதற்கு மூலமில்லை.

உலத்தல் = வளைதல், சுற்றுதல், உருளுதல். உலவுதல் = சுற்றுதல். உலா = சுற்றிவருகை.

உல உலவு - உலகு = சுற்றிவரும் கோள். உலகு - உலகம். வட உலகம். வடமொழி யில் லோக என்னும் சொற்குச் சொல்லக் கூடியபொருள் பார்க்கப்படுவது என்பதே. லோக் பார் . E . look.

நோக்கு - லோக் (வ.).

கண்ணகன் (ஆண்பாற் பெயர்) கண்ணகி (பெண்பாற் பெயர்.) கண்ணகனார் ஓரு பழம்புலவர்.

கண்ணகி என்னும் தமிழ்ப்பெயர் கன்யகா என்னும் தமிழ்த் திரி சொல்லாகிய வடசொல்லின் திரிபன்று.

அத்தன் = தந்தை. அத்தி = தா-. பெற்றோரைக் குறிக்குஞ் சொற்கள் பாலீறாகவும் வரும். எ-டு: செல்லப்பன், செல்லம்மை. தட்டான்+அத்தி= தட் டாத்தி. வண்ணான்+அத்தி=வண்ணாத்தி. அத்தன்-அச்சன், அத்தி-அச்சி.

கள்ளன்-கள்ளச்சி (பெ. பா.), மருந்துவன் – மருத்துவச்சி (பெ. பா.).

அத்தி என்பதன் ஈறான ‘தி’ ஸ்திரீ என்னும் வடசொல்லின் சிதைவன்று. அத்தி என்னும் தென்சொல் அக்கை என்னும் பொருளில் வடமொழியிலும் வழங்குகின்றது.