உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

43

துளம்-துளர். துளர்தல் = மணம் வீசுதல். "துளருஞ் சந்தனஞ் சோலைகளூடெலாம்"

துளம்-துளவு = மணம்வீசும் செடி.

துளவு-துளவம்-துளபம்.

துளவு-துளசு-துளசி.

துளம்-(துளை)-துழா-. ஒ. நோ: மாதுளம்-மாதுளை,

நாளி-நாழி, கழை-கழா-.

(சூளா. இரத.5)

துளசி-துலஸீ (வ.). துளசி முல்லைநிலச் செடியாதலால் முல்லை நிலத் தெ-வமாகிய மாயோனுக்கு உகந்தததாகக் கொள்ளப்பெற்றது.

துண்ணுதல் = பருத்தல். துண்-தொண்-தொண்ணை = பருத்தது. துண் - தூ ண் - தூணி -தூணித்தல் = பருத்தல், தூண் = திரண்ட மரக்கம்பம் அல்லது கற்கந்து. தூண் - தூணம் = பருத்ததூண்.

தூணம் ஸ்தூண, ஸ்தூணா (வ.).

வடவர் காட்டும் ஸ்தா (நில்) என்னும் மூலம் பொருந்தாது. திகைதல் முடிதல், தீர்தல். திகை = முடிவு, எல்லை, திசை.

=

||

66

'திகையெலாந் தொழச்செல்வா-

(தேவா: 308: 1)

திகை திசை = எல்லை, எல்லைநோக்கிய விழுத்து (direction), எல்லைப்புறம், எல்லைப்புற நாடு. ஒ.நோ: சீமை (வ.) = எல்லை, நாடு.

திசை - தேசம் = நாடு, இடம். இடப்பொரு ளுருபு.

தேசம் - தேயம் = நாடு, இடம், இடப்பொரு ளுருபு.

தேயம் - தேம் = இடப்பொரு ளுருபு.

தேம்-தே-தேவகை = இடவகை, இடப்பொரு ளுருபு.

திகை - திக்(வ.), திசை - திசா (S) திச்(வ.)

வடவர் திச் (காட்டு) என்பதை மூலமாகக் காட்டி, அது திக் என்று திரிந்த தாகக் கூறுவர். வடநூல் வேறு வழியா- வந்ததாயின், திக்கா என்னும் பிராகிருதச் சொல்லினின்று வந்திருக்கலாம். நோக்கு (த., - (தேக் (பிரா.) = காண். தேக் திக்கா = காட்டு(பி. வி.) திக்கா திக் (வ.). - திச் (வ.)