உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தொள்ளுதல் = தோண்டுதல், குடைதல்.

தொள் தோள்

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

தோணி (தோண்)

=

முதற்காலத்திற் பெரிய

அடிமரத்திற் குடையப்பட்ட நீர்க்கலம், நீர்த்தொட்டி, ஓடம், படகு.

தோணி (வ.) த்ரோணி (d). மரத்தினாற் செ-யப்பட்டது என்று வேர்ப்பொருள் கூறி, த்ரு (மரம்) என்பதை வேராக வடவர் காட்டுவது பொருந்தாது, த்ரமிள (தமிழ்), ப்ரதி (படி), ம்ருது (மெது), வ்ருஷ (விடை) என்பவற்றிற்போல், த்ரோணி என்பதன் ரகரமும் இடைச்செருகலாக

வந்ததே.

நெள் - நெ--நேயம் = நெ-போல் ஒட்டும் குணமாகிய அன்பு. ஒ.நோ: பசை-பாசம் = அன்பு. நீரம்-ஈரம் = அன்பு. நெ- ஸ்நிஹ் (வ.) நேயம்- நேஎம் (பிரா.).ஸ்நேஹ (வ.)

Snow என்னும் ஆங்கிலச் சொல் ஸ்நேஹ என்பதனோடு தொடர்புள்ள தாயின், அதற்கும் தென்சொல்லே அடிமூலமா யிருத்தல் வேண்டும்.

பார்-பார்ப்பான் நூல்களைப் பார்ப்பவன். பார்ப்பனன் என்னும் வடிவம் செ-வனன் (செ-வான்) என்னும் வா-பாட்டது.

இ.கா.

நி.கா.

பார்த்தனன் பார்க்கின்றனன்

எ.கா.

பார்ப்பனன்

ஆரியர் வருமுன் அந்தணர் எனப்பெற்றவர் தமிழ்த் துறவியரே.

66

“அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

(30)

என்று திருவள்ளுவர் ‘நீத்தார் பெருமை' யதிகாரத்திற் கூறியிருத்தல் காண்க.

அந்தணர் என்னும் பெயர் சிறப்பாக ஐயர் என்னும் முனிவரையே குறிப் பினும், நால்வகைத் தலைவருள் முதல்வரைக் குறிக்கும்போது பார்ப்பார் என் னும் இல்லறத்தாரையும் தழுவும். இம் முப்பெயர்களும் ஆரியர் வருமுன் தமிழ வகுப்பார்க்கே வழங்கிய தூய தமிழ்ச்சொற்கள் என அறிக.

ம்

பரம்-பரமன்-பரமம்(த.)-பிரமம்(வ.)-பிராமணன். பார்ப்பனன் என்னும் தென்சொற்கும் பிராமணன் என்னும் வடசொற்கும் யாதொரு தொடர்பு மில்லை.