உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

45

கோள்-கோ = கவரப்படும் ஆ. பண்டைக்காலத்திற் கொள்ளைக்கார ராலும் அரசராலும் பெரும்பாலுங் கவரப்பட்டது ஆவே.

“ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே”

(தொல்.1004)

கோ-கோவன்-கோன் = இடையர் பட்டப்பெயர். கோன்-கோனான் = மாட்டிடையன், இடையன், இடையர் பட்டப்பெயர். ஒ.நோ. ஆ-ஆயன் = மாட் டிடை யன், டையன்.

கோ OS. kō, OE. kō, E. cow, Skt. gō. gö இச் சொற்கு ஆரியமொழி களில் மூலமில்லை.

பிராமணர் நிலத்தேவர் என்றும் அவர் மொழி தேவமொழி யென்றும் தமிழர் மயங்கிய மயக்கத்தால், அவருடைய அகக்கரணங்கள் மரத்துப்போன காலத்தில், தமிழைக் கெடுக்க வேண்டுமென்றே ஆரியச் சொற்கள் அதில் தாராளமாகப் புகுத்தப்பட்டன. அவை தமிழர் விருப்பால் அல்லது தேவையால் தழுவப்பட்டவையல்ல. ஆயினும் இன்று அவற்றை, பண்டைத் தமிழர் வட சொற்களைக் கடன் கொண்டனர் என்று காட்டற்கும், வடமொழிச்சென்ற தமிழ்ச்சொற்களை வடசொற்கள் என்று திரித்தற்கும் சான்றாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது மடிமாங்கா- போடுதல் போன்ற கயமையே. வடமொழிச்சென்ற தென்சொற்களுட் பலவற்றின் விளக்கத்தை என் ‘வடமொழி வரலாறு' என்னும் நூலுட் கண்டு தெளிக.

இனி,

“பாவ லோசன பாநுவி லோசன

பரம லோசன பக்தச காயமா

கால காலத்ரி சூலக பாலவே

கம்ப சாம்பக டம்பவ னேசனே’

என்று குமரகுருபரரும்,

66

'நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப

நிர்விஷய கைவல்யமா

நி கள வசங்கசஞ் சலரகித நிர்வசன

நிர்த்தொந்த நித்தமுக்த

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண

சதானந்த ஞானபகவ